• Nov 23 2024

மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் -வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழப்பு!

Tamil nila / Oct 14th 2024, 6:42 pm
image

மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன் மரணித்து உள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இச் சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மரே தோட்ட வலதல பிரிவில் இன்று மதியம் இடம் பெற்று உள்ளது.

இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவிக்கையில்

இன்று மதியம் மரே தோட்ட வலதல பிரிவில் உள்ள எம்.முருகன் மூன்று குழந்தைகளின் தந்தை தனது மாட்டிற்கு புல் அறுக்க சென்ற போது வழுக்கி விழுந்த தலையில் காயம் அடைந்த நிலையில் விழுந்து கிடப்பதை கண்ட மக்கள் நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அனைத்து தொடர்ந்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டார் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடலம் பிரேத பரிசோதனை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட உள்ளது.

இப் பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டு உள்ளது.

மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் -வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழப்பு மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் வழுக்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் முன் மரணித்து உள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.இச் சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மரே தோட்ட வலதல பிரிவில் இன்று மதியம் இடம் பெற்று உள்ளது.இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவிக்கையில் இன்று மதியம் மரே தோட்ட வலதல பிரிவில் உள்ள எம்.முருகன் மூன்று குழந்தைகளின் தந்தை தனது மாட்டிற்கு புல் அறுக்க சென்ற போது வழுக்கி விழுந்த தலையில் காயம் அடைந்த நிலையில் விழுந்து கிடப்பதை கண்ட மக்கள் நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அனைத்து தொடர்ந்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டார் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து அவரது உடலம் பிரேத பரிசோதனை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட உள்ளது.இப் பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டு உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement