• Mar 05 2025

தேங்காய் பறிக்க தோட்டத்திற்குள் நுழைந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

Chithra / Mar 4th 2025, 11:54 am
image

 

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க  தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக மேற்கூறிய நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 துளை துப்பாக்கியுடன் குளியாப்பிட்டிய  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேங்காய் பறிக்க தோட்டத்திற்குள் நுழைந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு  குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க  தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக மேற்கூறிய நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 துளை துப்பாக்கியுடன் குளியாப்பிட்டிய  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த துப்பாக்கிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement