கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2024 டிசம்பர் 13 ஆம் திகதி கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு(CCD) சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
27 வயதான சந்தேக நபர் கடந்த மாதம் புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல். கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2024 டிசம்பர் 13 ஆம் திகதி கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கொழும்பு குற்றப்பிரிவு(CCD) சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.27 வயதான சந்தேக நபர் கடந்த மாதம் புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.