• Nov 06 2024

2 நாட்களாக லிப்ட்டில் மாட்டிக்கொண்ட நபர் - நடந்தது என்ன?

Tharun / Jul 16th 2024, 6:03 pm
image

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கடந்த 13-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக 59 வயதான நபர் ஒருவர் சென்ற போது மருத்துவமனையில் உள்ள லிப்ட் நடுவழியில் நின்றதால் ரவீந்திரன் லிப்ட்டிற்குள் சிக்கியுள்ளார்.

இந்நிலையில்  2 நாட்களாக செயல்படாமல் இருந்த லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது தான் ரவீந்திரன் லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.

இதனை அடுத்து தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்த அவர் "எனது அலைபேசியைப் பயன்படுத்தி லிப்ட்டுக்குள் இருந்த அவசர உதவி எண்களை அழைத்தேன். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் அலைபேசி கீழே விழுந்து வேலை செய்வதை நிறுத்தியது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விடுமுறை நாள் என கருதி உதவிக்காக காத்திருந்தேன்.

ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனையின் 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 நாட்களாக லிப்ட்டில் மாட்டிக்கொண்ட நபர் - நடந்தது என்ன கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கடந்த 13-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக 59 வயதான நபர் ஒருவர் சென்ற போது மருத்துவமனையில் உள்ள லிப்ட் நடுவழியில் நின்றதால் ரவீந்திரன் லிப்ட்டிற்குள் சிக்கியுள்ளார்.இந்நிலையில்  2 நாட்களாக செயல்படாமல் இருந்த லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது தான் ரவீந்திரன் லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.இதனை அடுத்து தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்த அவர் "எனது அலைபேசியைப் பயன்படுத்தி லிப்ட்டுக்குள் இருந்த அவசர உதவி எண்களை அழைத்தேன். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் அலைபேசி கீழே விழுந்து வேலை செய்வதை நிறுத்தியது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விடுமுறை நாள் என கருதி உதவிக்காக காத்திருந்தேன்.ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது" என்று தெரிவித்தார்.இதனை அடுத்து பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனையின் 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement