• May 06 2025

கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட நபர்; கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு; தேர்தல் தினத்தன்று பரபரப்பு

Chithra / May 6th 2025, 11:34 am
image

 

கட்டுநாயக்க 18 ஆவது மைல் கம்பம் பகுதியில் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (06) காலை 10:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நபர் இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்றது.

அங்கு சந்தேக நபர் ஒரு பொலிஸ் அதிகாரியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.

அப்போது, உடனடியாக பதிலளித்த சப பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் முழங்கால் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக சீதுவையில் உள்ள விஜய குமாரதுங்க நினைவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட நபர்; கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு; தேர்தல் தினத்தன்று பரபரப்பு  கட்டுநாயக்க 18 ஆவது மைல் கம்பம் பகுதியில் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று (06) காலை 10:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட நபர் இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்றது.அங்கு சந்தேக நபர் ஒரு பொலிஸ் அதிகாரியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.அப்போது, உடனடியாக பதிலளித்த சப பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் முழங்கால் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக சீதுவையில் உள்ள விஜய குமாரதுங்க நினைவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement