• Oct 31 2024

வேலை தருவதாக கூறி அத்துமீறலில் ஈடுபட்ட நபர்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு! samugammedia

Tamil nila / Jun 17th 2023, 9:46 pm
image

Advertisement

வடக்கு லண்டனில் மசாஜ் செய்யும் தொழிலை முன்னெடுத்துவரும் இந்தியர் ஒருவர் மீது நான்கு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

மேலும் தமது மசாஜ் பார்லர்கள் ஒன்றில் வேலை தருவதாக கூறி நான்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார். தற்போது 50 வயதாகும் ரகு சிங்கமனேனி என்பவர் Luton பகுதியில் வசித்து வருபவர்.இவரே வேலை தருவதாக கூறி நான்கு பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர் இரண்டு மசாஜ் பார்லர்களை இருவேறு பகுதிகளில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வேலைவாய்ப்பு செயலிகளில் தமது பார்லர்களில் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.

அத்துடன் நம்பி இவரை நாடும் பெண்களை இவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 17 வயதான பெண் ஒருவர் தாம் சிங்கமனேனியின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக கூறி முதல் முதலில் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.பயிற்சி அளிப்பதாக கூறி தம்மிடம் சிங்கமனேனி அத்துமீறியதாக குறித்த பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த நாள் மீண்டும் அவரது பார்லருக்கு சென்ற நிலையில் prosecco பானம் குடிக்க தந்ததாகவும், அதன் பின்னர் தம்மை ஒரு ஹொட்டலுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த 17 வயது பெண் டோட்டன்ஹாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிங்கமனேனி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், 19, 17 மற்றும் 23 வயது பெண்கள் மூவரும் சிங்கமனேனி தொடர்பில் புகார் அளிக்க, மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டது.

வேலைவாய்ப்பு என்ற நம்பிக்கையில் அவரை நாடிய பெண்களை அவர் ஏமாற்றி, தமது ஆசையை தீர்த்துள்ளார் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த பெண்கள் இந்த விவகாரத்தை வெளியே சொல்ல அஞ்சுவார்கள் எனவும் சிங்கமனேனி தவறாக புரிந்துகொண்டிருக்கலாம் எனவும், அனால் அதுவும் பொய்யாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், சிங்கமனேனி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


வேலை தருவதாக கூறி அத்துமீறலில் ஈடுபட்ட நபர்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு samugammedia வடக்கு லண்டனில் மசாஜ் செய்யும் தொழிலை முன்னெடுத்துவரும் இந்தியர் ஒருவர் மீது நான்கு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.மேலும் தமது மசாஜ் பார்லர்கள் ஒன்றில் வேலை தருவதாக கூறி நான்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்த வழக்கிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார். தற்போது 50 வயதாகும் ரகு சிங்கமனேனி என்பவர் Luton பகுதியில் வசித்து வருபவர்.இவரே வேலை தருவதாக கூறி நான்கு பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர் இரண்டு மசாஜ் பார்லர்களை இருவேறு பகுதிகளில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வேலைவாய்ப்பு செயலிகளில் தமது பார்லர்களில் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.அத்துடன் நம்பி இவரை நாடும் பெண்களை இவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 17 வயதான பெண் ஒருவர் தாம் சிங்கமனேனியின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக கூறி முதல் முதலில் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.பயிற்சி அளிப்பதாக கூறி தம்மிடம் சிங்கமனேனி அத்துமீறியதாக குறித்த பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள் மீண்டும் அவரது பார்லருக்கு சென்ற நிலையில் prosecco பானம் குடிக்க தந்ததாகவும், அதன் பின்னர் தம்மை ஒரு ஹொட்டலுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் நடத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த 17 வயது பெண் டோட்டன்ஹாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிங்கமனேனி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், 19, 17 மற்றும் 23 வயது பெண்கள் மூவரும் சிங்கமனேனி தொடர்பில் புகார் அளிக்க, மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டது.வேலைவாய்ப்பு என்ற நம்பிக்கையில் அவரை நாடிய பெண்களை அவர் ஏமாற்றி, தமது ஆசையை தீர்த்துள்ளார் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த பெண்கள் இந்த விவகாரத்தை வெளியே சொல்ல அஞ்சுவார்கள் எனவும் சிங்கமனேனி தவறாக புரிந்துகொண்டிருக்கலாம் எனவும், அனால் அதுவும் பொய்யாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், சிங்கமனேனி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement