• Nov 23 2024

அரச பேருந்து மோதி சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் சம்பவம்

Chithra / Jan 5th 2024, 8:39 am
image


திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (05) உயிரிழந்துள்ளார்

கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த நபர் மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதி படுகாயம் அடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் திருகோணமலை கஸ்தூரி நகர சேர்ந்த 43 வயதுடைய கருப்பையா கருணாநிதி   எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அரச பேருந்து மோதி சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழப்பு. தமிழர் பகுதியில் சம்பவம் திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (05) உயிரிழந்துள்ளார்கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த நபர் மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதி படுகாயம் அடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.உயிரிழந்தவர் திருகோணமலை கஸ்தூரி நகர சேர்ந்த 43 வயதுடைய கருப்பையா கருணாநிதி   எனவும் தெரிய வருகின்றது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement