• Sep 21 2024

6 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம் - கிளிநொச்சி ஆலய திருவிழாவில் சம்பவம்

Chithra / Jul 17th 2024, 4:32 pm
image

Advertisement

 

கிளிநொச்சி - பளை, கச்சார்வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், 5ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும், விநாயகப்பெருமானின் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதன்போது பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்ற நிலையில்,

கச்சார் வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் மாம்பழத்தை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

6 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம் - கிளிநொச்சி ஆலய திருவிழாவில் சம்பவம்  கிளிநொச்சி - பளை, கச்சார்வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், 5ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும், விநாயகப்பெருமானின் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.இதன்போது பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்ற நிலையில்,கச்சார் வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் மாம்பழத்தை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement