• Sep 21 2024

மாணிக்க வாசகர் குருபூசை நிகழ்வு! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 7:27 pm
image

Advertisement

'தமிழ் போற்றி சைவம் வளர்ப்போம்' எனும் தொணிப் பொருளில் மாணிக்க வாசகர் குருபூசை நிகழ்வும் ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்,மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கலாசார போட்டிகள் மற்றும் சிவ சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (25) பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறி பாடாசாலை ஒன்றியம்,ஸ்ரீ வீரையடி விநாயகர் அறநெறி பாடசாலை,வீரையடி விநாயகர் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டன் திருக் கூடம் ஆகிய ஆண்மீக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.


இதன் முதல் நிகழ்வாக ஆன்மீக எழுச்சி ஊர்வலமானது பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று, மாணிக்க வாசகர் உருவப் படம் தாங்கியவாறு கைகளில் நந்திக் கொடிகள்,பதாதைகள் ஏந்தியவாறு மங்கள வாத்தியம் இசைக்க ஆன்மீக சொற்பொழிவுடன் அறநெறி பாடசாலை மாணவர்கள் தமிழர் கலாச்சாரத்தை உணர்தும் முகமாக ஊர்வலமாக பாசிக்குடா வீதி வழியாக குகநேசன் கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தனர்.


அங்கு அறநெறி பாடசாலை அதிபர் ச.கார்த்தீபன் தலைமையில் நிகழ்வுள் யாவும் நடைபெற்றது.மாணிக்க வாசகர் சுவாமிக்கு விசேட குரு பூசை நடைபெற்று அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.இதன்போது மாணவர்களின் கலை நிகழ்சிகள், மாணிக்க வாசகர் சுவாமியின் அற்புதங்கள்,அவர் சைவத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் சைவப் புலவர்களால் சிறப்பு சொற்பொழிவுகள்,கதை பிரசங்கம்,வில்லுப் பாட்டு,பேச்சு,நடனம் என பல்வேறு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.இதேவேளை மடடக்களப்பு சிவதொண்டன் திருக் கூடத்தினால் மாணவர் மத்தியில் மாணிக்க வாசகர் சுவாமி தொடர்பான வினா,விடை போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



அத்துடன் பிரதேச முன்பள்ளி மாவர்களின் திறமையினையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.அத்துடன் அற நெறி மாணவர்களுக்கு யோகா கலையினை பயிற்றுவித்த ஆசிரியர் மோ.சுதாகரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்ப்பட்டார்.

இதே போன்று மாவட்டத்தில் ஆன்மீக சேவையாற்றி வரும் சைவப் புலவர் சிவானந்த ஜோதி ஞானசூரியம் மற்றும் சிவதொண்டன் திருக்கூடத் தலைவர் கமல்ராஜ் ஆகியோரும் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து மாணவர்களுக்கு உருத்திராட்சை சிவ சின்னம் அணிவிக்கப்பட்டது.நிகழ்வில் அதிதியாக இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் நே.பிருந்தாபன் கலந்து கொண்டார்.


மாணிக்க வாசகர் குருபூசை நிகழ்வு samugammedia 'தமிழ் போற்றி சைவம் வளர்ப்போம்' எனும் தொணிப் பொருளில் மாணிக்க வாசகர் குருபூசை நிகழ்வும் ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்,மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கலாசார போட்டிகள் மற்றும் சிவ சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (25) பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறி பாடாசாலை ஒன்றியம்,ஸ்ரீ வீரையடி விநாயகர் அறநெறி பாடசாலை,வீரையடி விநாயகர் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டன் திருக் கூடம் ஆகிய ஆண்மீக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன் முதல் நிகழ்வாக ஆன்மீக எழுச்சி ஊர்வலமானது பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று, மாணிக்க வாசகர் உருவப் படம் தாங்கியவாறு கைகளில் நந்திக் கொடிகள்,பதாதைகள் ஏந்தியவாறு மங்கள வாத்தியம் இசைக்க ஆன்மீக சொற்பொழிவுடன் அறநெறி பாடசாலை மாணவர்கள் தமிழர் கலாச்சாரத்தை உணர்தும் முகமாக ஊர்வலமாக பாசிக்குடா வீதி வழியாக குகநேசன் கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தனர்.அங்கு அறநெறி பாடசாலை அதிபர் ச.கார்த்தீபன் தலைமையில் நிகழ்வுள் யாவும் நடைபெற்றது.மாணிக்க வாசகர் சுவாமிக்கு விசேட குரு பூசை நடைபெற்று அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.இதன்போது மாணவர்களின் கலை நிகழ்சிகள், மாணிக்க வாசகர் சுவாமியின் அற்புதங்கள்,அவர் சைவத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் சைவப் புலவர்களால் சிறப்பு சொற்பொழிவுகள்,கதை பிரசங்கம்,வில்லுப் பாட்டு,பேச்சு,நடனம் என பல்வேறு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.இதேவேளை மடடக்களப்பு சிவதொண்டன் திருக் கூடத்தினால் மாணவர் மத்தியில் மாணிக்க வாசகர் சுவாமி தொடர்பான வினா,விடை போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அத்துடன் பிரதேச முன்பள்ளி மாவர்களின் திறமையினையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.அத்துடன் அற நெறி மாணவர்களுக்கு யோகா கலையினை பயிற்றுவித்த ஆசிரியர் மோ.சுதாகரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்ப்பட்டார்.இதே போன்று மாவட்டத்தில் ஆன்மீக சேவையாற்றி வரும் சைவப் புலவர் சிவானந்த ஜோதி ஞானசூரியம் மற்றும் சிவதொண்டன் திருக்கூடத் தலைவர் கமல்ராஜ் ஆகியோரும் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து மாணவர்களுக்கு உருத்திராட்சை சிவ சின்னம் அணிவிக்கப்பட்டது.நிகழ்வில் அதிதியாக இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் நே.பிருந்தாபன் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement