• May 13 2025

இலங்கையில் மூடப்படும் அபாயத்தில் பல தொழிற்சாலைகள்; 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம்! அமைச்சர் தகவல்

Chithra / Jul 23rd 2024, 8:30 am
image

 

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும்  சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் போது துறைமுகத்தில் செலுத்தப்படும் வரிக்கு மேலதிகமாக, தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வரி செலுத்த வேண்டியிருப்பதால் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக வரி விதிப்பினால் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மூடப்படும் அபாயத்தில் பல தொழிற்சாலைகள்; 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் அமைச்சர் தகவல்  இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும்  சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டிலுள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும், சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் போது துறைமுகத்தில் செலுத்தப்படும் வரிக்கு மேலதிகமாக, தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் வரி செலுத்த வேண்டியிருப்பதால் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதிக வரி விதிப்பினால் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now