• Dec 26 2024

Tharmini / Dec 25th 2024, 2:13 pm
image

தென்னாட்டு அருள் மிகு ஐம்பூதநாதர் திருக்கோவில் மற்றும்  தென்னாட்டு அருள் மிகு ஐம்பூதநாதர் திருக்கோவில் மாணவர் சபையின் எற்பாட்டில், மார்கழிப் பெருவிழாவில் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் மார்கழித்திங்கள் 10 நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

திருமுறைகள், நகர் ஊர்வலம் இதன்போது இடம்பெற்றது.

இவ் நகர் ஊர்வமானது வண்ணை ஸ்ரீ வைத்தீஸ்வரா தேவஸ்தான முன்றலில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து கே.கே.எஸ் வீதி, யாழ் வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வந்து யாழ். இந்திய மத்திய கலாசார மத்திய நிலையம்வரை சென்று நிறைவுபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய கலையான பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளும் நகர் ஊர்வலத்தை அலங்கரித்ததுடன் கொண்டதுடன் இரு யானைகளும் பவனி வந்தன.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்துகொண்டார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் அருளிய 1023 திருமுறைகள், திருநாவுக்கரசு நாயனார் அருளிய 456 திருமுறைகள், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய 07ஆம் திருமுறைகள், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 08 ஆம் திருமுறைகள், திருமூலதேவர் அருளிய 10 ஆம் திருமுறைகள், 12 ஆழ்வார்கள் அருளிய 11 ஆம் திருமுறைகள், தெய்வச்சேக்கிழார்  அருளிய 12  ஆம் திருமுறைகள், மெய்கண்ட சமுத்திரம் போன்ற நூல்கள் அடங்கிய தொகுதிகளை வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இந்திய பழனி ஆதீன குருவானவர் கையளித்தார்.

இவ் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏல்.இளங்கோவன், தஞ்சாவூர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ச.நல்லசிவம், செந்தமிழ் சொல் வித்தகர் பழனி குமாரலிங்கம், கொழும்பு பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் த.பிரசாந்தன், தவத்திரு வேலன் சுவாமிகள், ஆன்மீகத்தினர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





யாழில் இடம்பெற்ற மார்கழிப் பெருவிழா தென்னாட்டு அருள் மிகு ஐம்பூதநாதர் திருக்கோவில் மற்றும்  தென்னாட்டு அருள் மிகு ஐம்பூதநாதர் திருக்கோவில் மாணவர் சபையின் எற்பாட்டில், மார்கழிப் பெருவிழாவில் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் மார்கழித்திங்கள் 10 நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.திருமுறைகள், நகர் ஊர்வலம் இதன்போது இடம்பெற்றது.இவ் நகர் ஊர்வமானது வண்ணை ஸ்ரீ வைத்தீஸ்வரா தேவஸ்தான முன்றலில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து கே.கே.எஸ் வீதி, யாழ் வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வந்து யாழ். இந்திய மத்திய கலாசார மத்திய நிலையம்வரை சென்று நிறைவுபெற்றது.தமிழர்களின் பாரம்பரிய கலையான பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளும் நகர் ஊர்வலத்தை அலங்கரித்ததுடன் கொண்டதுடன் இரு யானைகளும் பவனி வந்தன.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்துகொண்டார்.திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் அருளிய 1023 திருமுறைகள், திருநாவுக்கரசு நாயனார் அருளிய 456 திருமுறைகள், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய 07ஆம் திருமுறைகள், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 08 ஆம் திருமுறைகள், திருமூலதேவர் அருளிய 10 ஆம் திருமுறைகள், 12 ஆழ்வார்கள் அருளிய 11 ஆம் திருமுறைகள், தெய்வச்சேக்கிழார்  அருளிய 12  ஆம் திருமுறைகள், மெய்கண்ட சமுத்திரம் போன்ற நூல்கள் அடங்கிய தொகுதிகளை வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இந்திய பழனி ஆதீன குருவானவர் கையளித்தார்.இவ் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏல்.இளங்கோவன், தஞ்சாவூர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ச.நல்லசிவம், செந்தமிழ் சொல் வித்தகர் பழனி குமாரலிங்கம், கொழும்பு பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் த.பிரசாந்தன், தவத்திரு வேலன் சுவாமிகள், ஆன்மீகத்தினர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement