• May 20 2024

எலான் மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த மார்க் - 5 மில்லியன் புதிய கணக்குகள்! samugammedia

Tamil nila / Jul 6th 2023, 12:22 pm
image

Advertisement

டுவிட்டர் நிறுவனத்தை  எலான் மஸ்க் வாங்கியது முதலாக ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக சரிய தொடங்கிய நிலையில் தற்போது புதிய அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் புதிய வரவான Threads இன்று வெளியான நிலையில் வேகவேகமாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.

எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்வீட் பார்ப்பதற்கு அளவுகோல், பணியாளர்கள் பணி நீக்கம் என ட்விட்டரின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில்தான் மெட்டா நிறுவனம் தனது புதிய Threads செயலியை இன்று உலகம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி அறிமுகமான 2 மணி நேரத்திற்கு 2 மில்லியன் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. 4 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

செயலியில் கணக்கு உருவாக்க இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருந்தாலே போதுமானது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் லாக் இன் செய்யும்போது இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் நபர்களை அப்படியே த்ரெட்ஸிலும் ஃபாலோ செய்து கொள்ளலாம்.

டுவிட்டர் போலவே த்ரெட்ஸிலும் போட்டோ, வீடியோவை பதிவுடன் இணைக்கும் வசதி உள்ளது. 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இதில் பதிவிட முடியும். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ப்ளூடிக் பெற்ற கணக்குகள் இதிலும் ப்ளூடிக்கோடே செயல்படும்.

மேலும் இது தவிர கமெண்ட் செக்‌ஷனில் வரும் மோசமான கமெண்ட்களை தானாக தணிக்கை செய்யும் வசதி இதில் உள்ளது. Mentions ல் எந்த வார்த்தைகள் கமெண்டில் இடம்பெற கூடாது என்பதை பதிவு செய்து விட்டால் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி இடம்பெறும் கமெண்டுகள் தானாக ஹைட் ஆகிவிடும்.

இந்த த்ரெட்ஸில் ட்விட்டரில் உள்ளதுபோல ட்விட்டர் ஸ்பேஸஸ், ஹேஷ்டேக் ட்ரெண்டிங் வசதிகள் காணப்படவில்லை. ட்விட்டர் போல த்ரெட்ஸுக்கு PC Web version இல்லை. ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும் அடுத்தடுத்து கூடுதலாக பல அம்சங்கள் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த மார்க் - 5 மில்லியன் புதிய கணக்குகள் samugammedia டுவிட்டர் நிறுவனத்தை  எலான் மஸ்க் வாங்கியது முதலாக ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக சரிய தொடங்கிய நிலையில் தற்போது புதிய அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெட்டா நிறுவனத்தின் புதிய வரவான Threads இன்று வெளியான நிலையில் வேகவேகமாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்வீட் பார்ப்பதற்கு அளவுகோல், பணியாளர்கள் பணி நீக்கம் என ட்விட்டரின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்நிலையில்தான் மெட்டா நிறுவனம் தனது புதிய Threads செயலியை இன்று உலகம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி அறிமுகமான 2 மணி நேரத்திற்கு 2 மில்லியன் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. 4 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்துள்ளது.செயலியில் கணக்கு உருவாக்க இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருந்தாலே போதுமானது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் லாக் இன் செய்யும்போது இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் நபர்களை அப்படியே த்ரெட்ஸிலும் ஃபாலோ செய்து கொள்ளலாம்.டுவிட்டர் போலவே த்ரெட்ஸிலும் போட்டோ, வீடியோவை பதிவுடன் இணைக்கும் வசதி உள்ளது. 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இதில் பதிவிட முடியும். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ப்ளூடிக் பெற்ற கணக்குகள் இதிலும் ப்ளூடிக்கோடே செயல்படும்.மேலும் இது தவிர கமெண்ட் செக்‌ஷனில் வரும் மோசமான கமெண்ட்களை தானாக தணிக்கை செய்யும் வசதி இதில் உள்ளது. Mentions ல் எந்த வார்த்தைகள் கமெண்டில் இடம்பெற கூடாது என்பதை பதிவு செய்து விட்டால் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி இடம்பெறும் கமெண்டுகள் தானாக ஹைட் ஆகிவிடும்.இந்த த்ரெட்ஸில் ட்விட்டரில் உள்ளதுபோல ட்விட்டர் ஸ்பேஸஸ், ஹேஷ்டேக் ட்ரெண்டிங் வசதிகள் காணப்படவில்லை. ட்விட்டர் போல த்ரெட்ஸுக்கு PC Web version இல்லை. ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனினும் அடுத்தடுத்து கூடுதலாக பல அம்சங்கள் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement