• Sep 20 2024

தங்கைக்கு திருமணம்-8 கோடி வரதட்சணை-வாய் பிளந்த ஊர் மக்கள்! samugammedia

Tamil nila / Mar 29th 2023, 4:37 pm
image

Advertisement

சகோதரியின் திருமணத்திற்கு நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாய்யினை வரதட்சணையாக அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.


இச்சம்பவம் ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 


இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணைத்  தடுப்புச் சட்டத்தின் பிரகாரம்,  வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக கருதப்படுகின்றது.


இந்நிலையில் ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் சுமார் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்து தங்களுடைய பாச தங்கை பன்வாரி தேவியின் திருமணத்தை நடத்தி அசத்தியுள்ளனர்.


அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்களே  சகோதரியின் திருமணத்திற்காக இந்த பெரும் தொகையை செலுத்தியுள்ளனர்.


வரதட்சணை தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் ரூ.2.21 கோடி ரொக்கம், 4 கோடி மதிப்பிலான 100 பிகாஸ் நிலம் மற்றும் குதா பகவன்தாஸ் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 1 பிகா நிலம் அளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறாக தங்கையின் திருமணத்திற்கு சகோதரர்கள் 8 கோடியளவில் வரதட்சணை கொடுத்துள்ளமை அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

தங்கைக்கு திருமணம்-8 கோடி வரதட்சணை-வாய் பிளந்த ஊர் மக்கள் samugammedia சகோதரியின் திருமணத்திற்கு நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாய்யினை வரதட்சணையாக அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.இச்சம்பவம் ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணைத்  தடுப்புச் சட்டத்தின் பிரகாரம்,  வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக கருதப்படுகின்றது.இந்நிலையில் ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் சுமார் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்து தங்களுடைய பாச தங்கை பன்வாரி தேவியின் திருமணத்தை நடத்தி அசத்தியுள்ளனர்.அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்களே  சகோதரியின் திருமணத்திற்காக இந்த பெரும் தொகையை செலுத்தியுள்ளனர்.வரதட்சணை தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் ரூ.2.21 கோடி ரொக்கம், 4 கோடி மதிப்பிலான 100 பிகாஸ் நிலம் மற்றும் குதா பகவன்தாஸ் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 1 பிகா நிலம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறாக தங்கையின் திருமணத்திற்கு சகோதரர்கள் 8 கோடியளவில் வரதட்சணை கொடுத்துள்ளமை அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement