• Apr 26 2024

கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான இளைஞனுக்கு திருமணம்!SamugamMedia

Sharmi / Mar 18th 2023, 8:31 pm
image

Advertisement

உலகிலேயே ஆகக் குள்ளமான உடற்கட்டழகர் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான பிரதிக் விட்டல் மொகித்தே, 28வது வயதில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.



மூன்று அடி நான்கு அங்குல உயரமே கொண்ட இவர் 22 வயதான ஜெயாவைக் கைப்பிடித்தார். திருவாட்டி ஜெயாவும் திரு பிரதிக்கைப்போல் குள்ளமானவர்தான்.



உடற்கட்டழகராக விரும்பிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிக் கடந்த 2012ஆம் ஆண்டில் அதற்கான பயிற்சிகளைத் தொடங்கினார். தமது உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார்.

உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார்.


கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலாக உடற்கட்டழகுப் போட்டியில் பிரதிக் கலந்துகொண்டார். 

அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உலகின் ஆகக் குள்ளமான உடற்கட்டழகராக கின்னஸ் சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்தது.

“கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதனைச் சாதித்ததே என் வாழ்க்கையில் ஆகப் பெரிய விஷயம்,” என பிரதிக் தெரிவித்துள்ளார்.



கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான இளைஞனுக்கு திருமணம்SamugamMedia உலகிலேயே ஆகக் குள்ளமான உடற்கட்டழகர் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான பிரதிக் விட்டல் மொகித்தே, 28வது வயதில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.மூன்று அடி நான்கு அங்குல உயரமே கொண்ட இவர் 22 வயதான ஜெயாவைக் கைப்பிடித்தார். திருவாட்டி ஜெயாவும் திரு பிரதிக்கைப்போல் குள்ளமானவர்தான்.உடற்கட்டழகராக விரும்பிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிக் கடந்த 2012ஆம் ஆண்டில் அதற்கான பயிற்சிகளைத் தொடங்கினார். தமது உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார். உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலாக உடற்கட்டழகுப் போட்டியில் பிரதிக் கலந்துகொண்டார்.  அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உலகின் ஆகக் குள்ளமான உடற்கட்டழகராக கின்னஸ் சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்தது. “கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதனைச் சாதித்ததே என் வாழ்க்கையில் ஆகப் பெரிய விஷயம்,” என பிரதிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement