யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச் சந்தை நோய் பரவும் இடமாக மாறி உள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தகர்கள்,
நாம் நீண்ட காலமாக மருதங்கேணி பொதுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது பிரதான தேவையாக மலசல கூடம் காணப்படுகின்ற போதும் அதற்கான தண்ணீர் வசதி பல மாதங்களாக இல்லை.
இதனால் இங்கு வருகின்ற வர்த்தகர்கள் மற்றும் மக்கள் மலசல கூடத்தை பாவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
தண்ணீர் இல்லாத போதும் அருகில் காணப்படும் குளத்தில் தண்ணீர் அள்ளி மலசல கூடத்தை சிலர் பாவிக்கின்றார்கள். இதனால் சிலர் இந்தப் பகுதிகளில் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது
வேறு இடங்களில் இருந்து வரும் சிலரும் இந்த மலசல கூடத்தை பாவிக்கிறார்கள்.
சில தேவைகளுக்காக நாங்களும் இந்த தண்ணீரையே பாவிக்க வேண்டியுள்ளது. இதனால் எமக்கும் எமது மக்களுக்கும் நோய் பரவும் நிலை காணப்படுகின்றது.
பொதுச் சந்தையின் சுற்றுப்புறச் சூழலை இரவு நேரங்களில் பலர் பாவிக்கின்றார்கள். மதுபான போத்தல்கள் அதிகமாக காணப்படுகின்றது.
இரவு நேரங்களில் இங்கு வரும் சிலர் சமைத்து சாப்பிட்டு களியாட்டங்களில் ஈடுபடுகிறார்கள்
இங்கே தண்ணீர் தொட்டி வசதி உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை இது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த சுற்றுச்சூழல் மிகவும் அசுத்தமாக காணப்படுகின்றது.
இது தொடர்பாக நாங்கள் பருத்தித்துறை பிரதேச சபைக்கு பலமுறை அறிவித்தோம்.எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுற்றுச்சூழல் மிகவும் அபாயகரமாக காணப்படுவதனால் இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை காணப்படுகிறது.
உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை எமது தேவையை கருத்தல் கொண்டு மலசல கூடத்திற்கான நீர் வசதியை பெற்று தருவதுடன் சுற்றுச்சூழலையும் துப்புரவு செய்யுமாறு தாம் வேண்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச சபை, சுகாதார பரிசோதகர்களால் கைவிடப்பட்ட மருதங்கேணி பொதுச் சந்தை; நோய் பரவும் அபாயம் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச் சந்தை நோய் பரவும் இடமாக மாறி உள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்சம்பவம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தகர்கள்,நாம் நீண்ட காலமாக மருதங்கேணி பொதுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.எமது பிரதான தேவையாக மலசல கூடம் காணப்படுகின்ற போதும் அதற்கான தண்ணீர் வசதி பல மாதங்களாக இல்லை.இதனால் இங்கு வருகின்ற வர்த்தகர்கள் மற்றும் மக்கள் மலசல கூடத்தை பாவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.தண்ணீர் இல்லாத போதும் அருகில் காணப்படும் குளத்தில் தண்ணீர் அள்ளி மலசல கூடத்தை சிலர் பாவிக்கின்றார்கள். இதனால் சிலர் இந்தப் பகுதிகளில் மலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகின்றதுவேறு இடங்களில் இருந்து வரும் சிலரும் இந்த மலசல கூடத்தை பாவிக்கிறார்கள்.சில தேவைகளுக்காக நாங்களும் இந்த தண்ணீரையே பாவிக்க வேண்டியுள்ளது. இதனால் எமக்கும் எமது மக்களுக்கும் நோய் பரவும் நிலை காணப்படுகின்றது.பொதுச் சந்தையின் சுற்றுப்புறச் சூழலை இரவு நேரங்களில் பலர் பாவிக்கின்றார்கள். மதுபான போத்தல்கள் அதிகமாக காணப்படுகின்றது.இரவு நேரங்களில் இங்கு வரும் சிலர் சமைத்து சாப்பிட்டு களியாட்டங்களில் ஈடுபடுகிறார்கள்இங்கே தண்ணீர் தொட்டி வசதி உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை இது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த சுற்றுச்சூழல் மிகவும் அசுத்தமாக காணப்படுகின்றது. இது தொடர்பாக நாங்கள் பருத்தித்துறை பிரதேச சபைக்கு பலமுறை அறிவித்தோம்.எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சுற்றுச்சூழல் மிகவும் அபாயகரமாக காணப்படுவதனால் இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை காணப்படுகிறது.உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை எமது தேவையை கருத்தல் கொண்டு மலசல கூடத்திற்கான நீர் வசதியை பெற்று தருவதுடன் சுற்றுச்சூழலையும் துப்புரவு செய்யுமாறு தாம் வேண்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.