• Nov 28 2024

மஸ்கெலியா சட்ட விரோதமாக கட்டடங்களால் அசௌகரியங்கள் தீர்வு பெற்றுத்தர : அதிகாரிகள் முன்வரவேண்டும்

Tharmini / Oct 15th 2024, 4:00 pm
image

மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியை யும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதிகள் தீ பரவாமல் தடுக்க வழங்கபட்ட இடத்தில் உள்ளது. அவ்வாறு வழங்கப்பட சகல காணிகளும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு மேற் கொண்டு சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

அதற்க்கான அனுமதியையும் அம்பகமுவ பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகள் வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்ட பட்டதால் பாரிய அளவிலான அசௌகரி யத்தை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பிரதான வீதியை யும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள இரண்டு வியாபார நிலையத்தால் அடி பாதையாக மாறியுள்ள அந்த வீதியில் அமைந்துள்ளது கள்ளுக்கடை யில் குடித்து விட்டு அப் பகுதியில் சிறுநீர் கழிப்பதால் ஒரே துர் நாற்றம் வீசும் அபாயம் உள்ளது.

அத்துடன் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் குழந்தைகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் மாணவிகள் பாரிய அளவில் அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபை, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளனர் குடியிருப்பாளர்கள்.

குடியிருப்பாளர்கள் மற்றும் பொது மக்களின் ஒரே வேண்டுகோள் 1968 ம் ஆண்டு மஸ்கெலியா நகரம் புது பொலிவுடன் புதிய நகரமாக கட்ட அனுமதி வழங்கியது போல சட்ட விரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அகற்ற பட்டு பாதசாரிகள், குடியிருப்பாளர்கள் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இதற்கு தீர்வு பெற்று கொடுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சு முன் வரவேண்டும்.




மஸ்கெலியா சட்ட விரோதமாக கட்டடங்களால் அசௌகரியங்கள் தீர்வு பெற்றுத்தர : அதிகாரிகள் முன்வரவேண்டும் மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியை யும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதிகள் தீ பரவாமல் தடுக்க வழங்கபட்ட இடத்தில் உள்ளது. அவ்வாறு வழங்கப்பட சகல காணிகளும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு மேற் கொண்டு சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.அதற்க்கான அனுமதியையும் அம்பகமுவ பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகள் வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்ட பட்டதால் பாரிய அளவிலான அசௌகரி யத்தை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பிரதான வீதியை யும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள இரண்டு வியாபார நிலையத்தால் அடி பாதையாக மாறியுள்ள அந்த வீதியில் அமைந்துள்ளது கள்ளுக்கடை யில் குடித்து விட்டு அப் பகுதியில் சிறுநீர் கழிப்பதால் ஒரே துர் நாற்றம் வீசும் அபாயம் உள்ளது.அத்துடன் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் குழந்தைகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் மாணவிகள் பாரிய அளவில் அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபை, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளனர் குடியிருப்பாளர்கள்.குடியிருப்பாளர்கள் மற்றும் பொது மக்களின் ஒரே வேண்டுகோள் 1968 ம் ஆண்டு மஸ்கெலியா நகரம் புது பொலிவுடன் புதிய நகரமாக கட்ட அனுமதி வழங்கியது போல சட்ட விரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அகற்ற பட்டு பாதசாரிகள், குடியிருப்பாளர்கள் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இதற்கு தீர்வு பெற்று கொடுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சு முன் வரவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement