• May 18 2025

சிவில் சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு விடயங்களில் மக்களின் குரல்களை நசுக்க முயற்சி..!

Sharmi / May 17th 2025, 9:16 pm
image

இந்த தேசத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய இழப்பையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய மீள்ச்சியையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் செயல்படுகின்ற எங்களைப் போன்ற சிவில் சமூக செயல்பாட்டாளர்களை நசுக்கி ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு சார்ந்த விடயங்களில் இவர்கள் மக்களின் குரல்களை நசுக்க பார்க்கின்றார்கள் என்கின்ற ஒரு உண்மை முகம் வெளிப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மையில் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் இன்று மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 14ஆம் திகதி குடும்பி மலை நோக்கி பயணம் செய்தபோது சிங்கள மொழியிலும் கொச்சைத் தமிழிலும் பேசிய நபர்களால் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பித்த 12-ஆம் திகதி முதலாவது நாள் சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தூபிக்கு அருகில் நாங்கள் ஆரம்பித்திருந்தோம். அப்போது அங்கு வருகை தந்திருந்த புலனாய்வு பிரிவை சேர்ந்து ஒருவர் எமது நிகழ்வுகளை அவர் பதிவு செய்த நேரத்தில் அவரோடு நான் தர்க்கத்தில் ஈடுபட்டேன்.

இரண்டாவது நாள் நிகழ்வு வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்றதன் பிற்பாடு மூன்றாவது நாள் நிகழ்வாக புலிபாய்ந்தகல் பாலத்தின் அருகில் நிகழ்வை செய்வதற்காக நாங்கள் ஆயத்தம் செய்திருந்தோம்.

துரதிஷ்டவசமாக அன்னை பூபதியின் மருமகனின் மனைவி இறந்ததன் காரணமாக எமது ஏற்பாட்டுக் குழுவில் அன்னை பூபதியின் மருமகன் இருப்பதினால் அந்த நிகழ்வை நாங்கள் நடத்த முடியாமல் போனது.

அந்த மரண வீட்டிற்கு சென்று காலை 10 மணி வரை அங்கு இருந்தேன் அதனை தொடர்ந்து எங்களோடு செயல்படும் செயற்பாட்டாளர்கள் இருவரை சந்திப்பதற்காக குடும்பிமலை நோக்கி நான் பயணத்தை மேற்கொண்டு இருந்தேன்.

அந்த நேரத்தில் ஐந்தாம் கட்டை ராணுவ சாவடியை தாண்டி பறவை வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது தரவை முகாமிக்கும் ஐந்தாம் கட்டை ராணுவ சாவடிக்கும் இடையில் உள்ள ஆறாம் கட்டை பகுதியில் நான் சென்று கொண்டிருக்கின்ற போது இரு பக்கத்திலும் இருவர் முகக் கவசங்களை அணிந்தவாறு வந்து என்னை மறித்து முதலாவதாக புலனாய்வுத் துறையினரோடு தர்க்கத்தில் ஈடுபடுகிறாயா என்று கேட்டு என் மீது தாக்குதலை நடத்தினர்.

இதன் போது நான் எப்போது நடைபெற்றது என்பதை அவர்களோடு கேட்டு கதைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் என் மீது தாக்குதலை தொடர்ந்தனர். அத்தோடு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சற்று தூரத்தில் இருந்த கிரவல் குழிக்குள் என்னுடைய மோட்டார் சைக்கிளை தள்ளினார்கள். அத்தோடு மோட்டார் சைக்கிளை உடைத்தார்கள் அத்தோடு என் மீதும் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

என் மீது தாக்குதல்களை மேற்கொள்ளுகின்ற போது பொங்குதமிழ் என்கின்ற ஒரு வார்த்தையை கூறினார்கள் பொங்குதமிழ் புலி கொண்டு வந்தது புலிகளை மீள் உருவாக்கம் செய்கின்றாயா? என்று கேட்டார்கள் இவ்வாறான வார்த்தைகளைப் பேசி என் மீது அதிகளவான தாக்குதலை முன்னெடுத்தார்கள்.

நான் அவர்களது அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தேன் பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் நான் எழும்பி வந்து நான் பயணித்த பாதையை நோக்கி நடந்து வந்தேன் யாராவது வருவார்களா எனக்கு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்தேன். அந்த வேலை அப்பகுதியில் வந்த ராணுவ வீரர் ஒருவரும் எதிர்பக்கம் வந்த பண்ணையாளர் ஒருவரும் வந்து என்னை பார்த்து ஆராய்ந்து பின்னர் பண்ணையாளர் என்னை கூட்டி வந்து கூலாவடி மகாவலி காரியாலயத்திற்கு முன்பதாக இருக்கின்ற உறவுக்காரர் ஒருவரின் வீட்டில் என்னை தங்க வைத்தார்கள்.

அங்கிருந்து எனது தொலைபேசியில் எனக்கு இடம்பெற்ற விடயங்களை பதிவு செய்து எனது நண்பர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எனக்கு இடம்பெற்ற விடயங்களை அனுப்பி வைத்தேன். அதன்பின்னர் நண்பர்களும் உறவுகளும் என்னிடத்தில் வந்து என்னை சந்திவெளி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன்பின்னர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுவரப்பட்டு பதினான்காம் தேதியில் இருந்து நேற்றைய தினம் மாலை வேளையில் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

இரண்டு விடயங்களை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது நான் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக பயணிப்பது வழமை. ஆனால் நான் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பிற்பாடு சில விடயங்களை நான் மீட்டுப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

நான் வழமையாக பயணம் செய்யும் அப்பாதையில் ஐந்தாம் கட்டையில் உள்ள இராணுவ முகாமில் இருப்பவர்கள் எவருமே ஒருபோதும் வெளியில் நான் கண்டது இல்லை. அந்த ராணுவ முகாமுக்கு உள்ளே மாத்திரம் தான் இருப்பார்கள்.

ஆனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த தினம் நான் வருவதை அவதானிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கலாமோ தெரியாது அந்த சந்தேகம் இருக்கின்றது ஏனென்றால் அந்த இராணுவ சாவடியில் இருந்த மூன்று நபர்கள் என்னுடைய மோட்டார் வாகனத்தை கண்டவுடன் அவர்கள் முன்பதாக வந்து என்னை அதிகளவாக அவதானிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் அவர்களை தாண்டி நான் சென்றதன் பிற்பாடு அவர்களை திரும்பிப் பார்த்தேன் அப்போதும் அவர்கள் என்னை அவதானித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த அவதானமும் நான் தாக்கப்பட்டதற்கும் இடையில் இந்த விடயங்களை ஒப்பிட்டு பார்க்கின்றபோது இந்த அரசாங்கம் சில அனுமதிகளை வழங்கியிருந்தாலும் அதாவது சில விடயங்களை செய்வதற்கு எதுவும் தடைகளும் இல்லை என்கின்ற போக்கில் காட்டப்பட்டாலும் இன்றைக்கு சர்வதேச நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இந்த விடயங்களை செய்வதற்காக எழுந்திருக்கின்ற எழுச்சிகள் அனைத்தும் இந்த அரசாங்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலை அவர்களுக்கு ஒரு பாதிப்பை கொடுக்கின்றது என்பதை உணர்ந்து இந்த தேசத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய இழப்பையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய மீள்ச்சியையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் செயல்படுகின்ற எங்களைப் போன்ற சிவில் சமூக செயல்பாட்டாளர்களை நசுக்கி ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு சார்ந்த விடயங்களில் இவர்கள் மக்களின் குரல்களை நசுக்க பார்க்கின்றார்கள் என்கின்ற ஒரு உண்மை முகம் வெளிப்படுகின்றது.

வடக்கில் எதுமித பிரச்சனையும் இல்லை கிழக்கில் பார்க்கின்ற போது ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாக இருக்கட்டும் மாவீரர் நாட்களாக இருக்கட்டும் அன்னை பூபதியின் நினைவாக இருக்கட்டும் குறிப்பாக அன்னை பூபதியின் நினைவேந்தலில் 2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்வதாக கூறி எனக்கு ஒரு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அன்னை பூபதி யார் அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா இல்லை. ஆகவே தொடர்ந்து இலக்கு வைக்கப்படுகின்றோம். தொடர்ந்தும் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

இந்த நாட்டில் நடைபெறுகின்றதே ஜனாதிபதி வடக்கிலே உள்ள மக்களுக்கு மாத்திரம் தான் அரசியல் தீர்வு தேவை என்கின்றார் கிழக்கில் தமிழ் மக்கள் இல்லையா கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தேவை இல்லையா வடக்கும் கிழக்கும் தமிழர்கள் தாயகம் என்று சொல்லப்பட்ட இந்தப் பகுதியை தந்திரோபாயமாக பிரித்துப் பார்க்க முற்படுகின்றார்களா.

வடக்குக்கு மாத்திரம் தான் அரசியல் தீர்வு வடக்குக்கு மாத்திரம் தான் தமிழர்கள் சார்ந்த உரிமைக்கான தீர்வு தேவை என்று சொன்னால் கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு என்ன தீர்வு. ஆகவே இவ்வாறான விடயங்களை பேசுகின்ற எங்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி எங்களை பயமுறுத்தி எம்மை தடுப்பதன் மூலம் இவர்கள் எதனை செய்ய முற்படுகின்றார்கள் என்பதனை கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கடைசியாக நான் மயங்குகின்ற போது ஒரு வார்த்தை சொல்லப்பட்டது இறுதி எச்சரிக்கை என்கின்ற ஒரு வார்த்தை பிரயோகம் எனக்கு பிரயோகிக்கப்பட்டது.

ஆகவே இதற்கான தீர்வை பெற்று தர வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் இந்த அரசாங்கம் செய்யப்போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும.; குற்றம் உழைத்தவர்களே நீதிபதியாக இருந்து கொண்டு எங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய விடயம் அல்ல இந்த விடயங்கள் பேசுபொருளாக்கப்பட்டு இனிமேலும் இது நிகழாமலுக்கு இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

சிவில் சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு விடயங்களில் மக்களின் குரல்களை நசுக்க முயற்சி. இந்த தேசத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய இழப்பையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய மீள்ச்சியையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் செயல்படுகின்ற எங்களைப் போன்ற சிவில் சமூக செயல்பாட்டாளர்களை நசுக்கி ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு சார்ந்த விடயங்களில் இவர்கள் மக்களின் குரல்களை நசுக்க பார்க்கின்றார்கள் என்கின்ற ஒரு உண்மை முகம் வெளிப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார்.மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மையில் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் இன்று மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,கடந்த 14ஆம் திகதி குடும்பி மலை நோக்கி பயணம் செய்தபோது சிங்கள மொழியிலும் கொச்சைத் தமிழிலும் பேசிய நபர்களால் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பித்த 12-ஆம் திகதி முதலாவது நாள் சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தூபிக்கு அருகில் நாங்கள் ஆரம்பித்திருந்தோம். அப்போது அங்கு வருகை தந்திருந்த புலனாய்வு பிரிவை சேர்ந்து ஒருவர் எமது நிகழ்வுகளை அவர் பதிவு செய்த நேரத்தில் அவரோடு நான் தர்க்கத்தில் ஈடுபட்டேன்.இரண்டாவது நாள் நிகழ்வு வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்றதன் பிற்பாடு மூன்றாவது நாள் நிகழ்வாக புலிபாய்ந்தகல் பாலத்தின் அருகில் நிகழ்வை செய்வதற்காக நாங்கள் ஆயத்தம் செய்திருந்தோம். துரதிஷ்டவசமாக அன்னை பூபதியின் மருமகனின் மனைவி இறந்ததன் காரணமாக எமது ஏற்பாட்டுக் குழுவில் அன்னை பூபதியின் மருமகன் இருப்பதினால் அந்த நிகழ்வை நாங்கள் நடத்த முடியாமல் போனது. அந்த மரண வீட்டிற்கு சென்று காலை 10 மணி வரை அங்கு இருந்தேன் அதனை தொடர்ந்து எங்களோடு செயல்படும் செயற்பாட்டாளர்கள் இருவரை சந்திப்பதற்காக குடும்பிமலை நோக்கி நான் பயணத்தை மேற்கொண்டு இருந்தேன்.அந்த நேரத்தில் ஐந்தாம் கட்டை ராணுவ சாவடியை தாண்டி பறவை வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது தரவை முகாமிக்கும் ஐந்தாம் கட்டை ராணுவ சாவடிக்கும் இடையில் உள்ள ஆறாம் கட்டை பகுதியில் நான் சென்று கொண்டிருக்கின்ற போது இரு பக்கத்திலும் இருவர் முகக் கவசங்களை அணிந்தவாறு வந்து என்னை மறித்து முதலாவதாக புலனாய்வுத் துறையினரோடு தர்க்கத்தில் ஈடுபடுகிறாயா என்று கேட்டு என் மீது தாக்குதலை நடத்தினர்.இதன் போது நான் எப்போது நடைபெற்றது என்பதை அவர்களோடு கேட்டு கதைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் என் மீது தாக்குதலை தொடர்ந்தனர். அத்தோடு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சற்று தூரத்தில் இருந்த கிரவல் குழிக்குள் என்னுடைய மோட்டார் சைக்கிளை தள்ளினார்கள். அத்தோடு மோட்டார் சைக்கிளை உடைத்தார்கள் அத்தோடு என் மீதும் தாக்குதலை மேற்கொண்டார்கள்.என் மீது தாக்குதல்களை மேற்கொள்ளுகின்ற போது பொங்குதமிழ் என்கின்ற ஒரு வார்த்தையை கூறினார்கள் பொங்குதமிழ் புலி கொண்டு வந்தது புலிகளை மீள் உருவாக்கம் செய்கின்றாயா என்று கேட்டார்கள் இவ்வாறான வார்த்தைகளைப் பேசி என் மீது அதிகளவான தாக்குதலை முன்னெடுத்தார்கள்.நான் அவர்களது அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தேன் பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் நான் எழும்பி வந்து நான் பயணித்த பாதையை நோக்கி நடந்து வந்தேன் யாராவது வருவார்களா எனக்கு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்தேன். அந்த வேலை அப்பகுதியில் வந்த ராணுவ வீரர் ஒருவரும் எதிர்பக்கம் வந்த பண்ணையாளர் ஒருவரும் வந்து என்னை பார்த்து ஆராய்ந்து பின்னர் பண்ணையாளர் என்னை கூட்டி வந்து கூலாவடி மகாவலி காரியாலயத்திற்கு முன்பதாக இருக்கின்ற உறவுக்காரர் ஒருவரின் வீட்டில் என்னை தங்க வைத்தார்கள்.அங்கிருந்து எனது தொலைபேசியில் எனக்கு இடம்பெற்ற விடயங்களை பதிவு செய்து எனது நண்பர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எனக்கு இடம்பெற்ற விடயங்களை அனுப்பி வைத்தேன். அதன்பின்னர் நண்பர்களும் உறவுகளும் என்னிடத்தில் வந்து என்னை சந்திவெளி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின்னர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுவரப்பட்டு பதினான்காம் தேதியில் இருந்து நேற்றைய தினம் மாலை வேளையில் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.இரண்டு விடயங்களை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது நான் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக பயணிப்பது வழமை. ஆனால் நான் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பிற்பாடு சில விடயங்களை நான் மீட்டுப் பார்க்க வேண்டி இருக்கின்றது. நான் வழமையாக பயணம் செய்யும் அப்பாதையில் ஐந்தாம் கட்டையில் உள்ள இராணுவ முகாமில் இருப்பவர்கள் எவருமே ஒருபோதும் வெளியில் நான் கண்டது இல்லை. அந்த ராணுவ முகாமுக்கு உள்ளே மாத்திரம் தான் இருப்பார்கள். ஆனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த தினம் நான் வருவதை அவதானிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கலாமோ தெரியாது அந்த சந்தேகம் இருக்கின்றது ஏனென்றால் அந்த இராணுவ சாவடியில் இருந்த மூன்று நபர்கள் என்னுடைய மோட்டார் வாகனத்தை கண்டவுடன் அவர்கள் முன்பதாக வந்து என்னை அதிகளவாக அவதானிக்க ஆரம்பித்தார்கள்.எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் அவர்களை தாண்டி நான் சென்றதன் பிற்பாடு அவர்களை திரும்பிப் பார்த்தேன் அப்போதும் அவர்கள் என்னை அவதானித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த அவதானமும் நான் தாக்கப்பட்டதற்கும் இடையில் இந்த விடயங்களை ஒப்பிட்டு பார்க்கின்றபோது இந்த அரசாங்கம் சில அனுமதிகளை வழங்கியிருந்தாலும் அதாவது சில விடயங்களை செய்வதற்கு எதுவும் தடைகளும் இல்லை என்கின்ற போக்கில் காட்டப்பட்டாலும் இன்றைக்கு சர்வதேச நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இந்த விடயங்களை செய்வதற்காக எழுந்திருக்கின்ற எழுச்சிகள் அனைத்தும் இந்த அரசாங்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலை அவர்களுக்கு ஒரு பாதிப்பை கொடுக்கின்றது என்பதை உணர்ந்து இந்த தேசத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய இழப்பையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய மீள்ச்சியையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் செயல்படுகின்ற எங்களைப் போன்ற சிவில் சமூக செயல்பாட்டாளர்களை நசுக்கி ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு சார்ந்த விடயங்களில் இவர்கள் மக்களின் குரல்களை நசுக்க பார்க்கின்றார்கள் என்கின்ற ஒரு உண்மை முகம் வெளிப்படுகின்றது.வடக்கில் எதுமித பிரச்சனையும் இல்லை கிழக்கில் பார்க்கின்ற போது ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாக இருக்கட்டும் மாவீரர் நாட்களாக இருக்கட்டும் அன்னை பூபதியின் நினைவாக இருக்கட்டும் குறிப்பாக அன்னை பூபதியின் நினைவேந்தலில் 2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்வதாக கூறி எனக்கு ஒரு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.அன்னை பூபதி யார் அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா இல்லை. ஆகவே தொடர்ந்து இலக்கு வைக்கப்படுகின்றோம். தொடர்ந்தும் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம். இந்த நாட்டில் நடைபெறுகின்றதே ஜனாதிபதி வடக்கிலே உள்ள மக்களுக்கு மாத்திரம் தான் அரசியல் தீர்வு தேவை என்கின்றார் கிழக்கில் தமிழ் மக்கள் இல்லையா கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தேவை இல்லையா வடக்கும் கிழக்கும் தமிழர்கள் தாயகம் என்று சொல்லப்பட்ட இந்தப் பகுதியை தந்திரோபாயமாக பிரித்துப் பார்க்க முற்படுகின்றார்களா.வடக்குக்கு மாத்திரம் தான் அரசியல் தீர்வு வடக்குக்கு மாத்திரம் தான் தமிழர்கள் சார்ந்த உரிமைக்கான தீர்வு தேவை என்று சொன்னால் கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு என்ன தீர்வு. ஆகவே இவ்வாறான விடயங்களை பேசுகின்ற எங்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி எங்களை பயமுறுத்தி எம்மை தடுப்பதன் மூலம் இவர்கள் எதனை செய்ய முற்படுகின்றார்கள் என்பதனை கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது.கடைசியாக நான் மயங்குகின்ற போது ஒரு வார்த்தை சொல்லப்பட்டது இறுதி எச்சரிக்கை என்கின்ற ஒரு வார்த்தை பிரயோகம் எனக்கு பிரயோகிக்கப்பட்டது. ஆகவே இதற்கான தீர்வை பெற்று தர வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் இந்த அரசாங்கம் செய்யப்போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும.; குற்றம் உழைத்தவர்களே நீதிபதியாக இருந்து கொண்டு எங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய விடயம் அல்ல இந்த விடயங்கள் பேசுபொருளாக்கப்பட்டு இனிமேலும் இது நிகழாமலுக்கு இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement