• May 19 2024

கொழும்பின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள்! நிலநடுக்கங்களுக்கும் இதற்கும் தொடர்பா? பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 5th 2023, 6:59 am
image

Advertisement

கொழும்பின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேருவளை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது முறையான விசாரணைகளை மேற்கொண்டு நில அதிர்வுகளுக்கான பிரதான காரணம் என்னவென்பதை உடனடியாக கண்டறிய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கொழும்பைச் சுற்றி நில அதிர்வு அளவிகளை பொருத்தி அதன் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நில அதிர்வுக்கான முக்கிய காரணங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1615ஆம் ஆண்டு முதல் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கொழும்பின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும், அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பை அண்மித்த பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பாரியளவில் இருக்கலாம் எனவும், எனவே விசேடமாக கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புவியியல் வரலாற்றின் படி, சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், அண்டார்டிகா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஒரே நிலமாக அமைந்திருந்தன. பல வருட புலம்பெயர்வுக்குப் பிறகு, இலங்கை இப்போது இருக்கும் வழியில் நிறுவப்பட்டுள்ளது.

இறுதியில் இலங்கையும், இந்தியாவும் ஒரே நிலமாகவே இருந்து வந்தன.பின்னர் இலங்கையும், இந்தியாவும் பிரிந்தன. இந்த பிரிவினைகளுடன், இலங்கை மற்றும் இந்திய கடல்களின் உட்பகுதியில் பல அசாதாரண அம்சங்கள் உள்ளன.

இந்த உள்நாட்டு கடல் நிலத்தின் அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு குறிப்பாக மேல் மாகாணத்தின் ஊடாக கொழும்பு வரை எவ்வாறு செல்கிறது என்பதை தெளிவாகக் காணலாம்.


இந்தக் கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மேற்கு மாகாணங்களில் சிறு நில அதிர்வுகள் ஏற்படுவதாக நாம் நினைக்கலாம். எதிர்வரும் காலங்களில் மேற்கு மாகாணங்களிலும் ஓரளவு நிலநடுக்கம் ஏற்படக்கூடும்.

அதிக மக்கள் தொகை கொண்ட அந்த மாகாணத்தில் லேசான அல்லது வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது பெரும் அழிவை ஏற்படுத்தும். ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது.

எனவே குறித்த பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகள் மற்றும் அதற்குரிய நவீன கருவிகளை பொருத்தி விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

கொழும்பின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள் நிலநடுக்கங்களுக்கும் இதற்கும் தொடர்பா பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia கொழும்பின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கண்டியில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பேருவளை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது முறையான விசாரணைகளை மேற்கொண்டு நில அதிர்வுகளுக்கான பிரதான காரணம் என்னவென்பதை உடனடியாக கண்டறிய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், கொழும்பைச் சுற்றி நில அதிர்வு அளவிகளை பொருத்தி அதன் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நில அதிர்வுக்கான முக்கிய காரணங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.1615ஆம் ஆண்டு முதல் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் கொழும்பின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும், அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பை அண்மித்த பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பாரியளவில் இருக்கலாம் எனவும், எனவே விசேடமாக கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புவியியல் வரலாற்றின் படி, சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், அண்டார்டிகா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஒரே நிலமாக அமைந்திருந்தன. பல வருட புலம்பெயர்வுக்குப் பிறகு, இலங்கை இப்போது இருக்கும் வழியில் நிறுவப்பட்டுள்ளது.இறுதியில் இலங்கையும், இந்தியாவும் ஒரே நிலமாகவே இருந்து வந்தன.பின்னர் இலங்கையும், இந்தியாவும் பிரிந்தன. இந்த பிரிவினைகளுடன், இலங்கை மற்றும் இந்திய கடல்களின் உட்பகுதியில் பல அசாதாரண அம்சங்கள் உள்ளன.இந்த உள்நாட்டு கடல் நிலத்தின் அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு குறிப்பாக மேல் மாகாணத்தின் ஊடாக கொழும்பு வரை எவ்வாறு செல்கிறது என்பதை தெளிவாகக் காணலாம்.இந்தக் கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மேற்கு மாகாணங்களில் சிறு நில அதிர்வுகள் ஏற்படுவதாக நாம் நினைக்கலாம். எதிர்வரும் காலங்களில் மேற்கு மாகாணங்களிலும் ஓரளவு நிலநடுக்கம் ஏற்படக்கூடும்.அதிக மக்கள் தொகை கொண்ட அந்த மாகாணத்தில் லேசான அல்லது வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது பெரும் அழிவை ஏற்படுத்தும். ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது.எனவே குறித்த பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகள் மற்றும் அதற்குரிய நவீன கருவிகளை பொருத்தி விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement