• Apr 01 2025

மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து!

Chithra / Mar 28th 2025, 10:06 am
image

 

மட்டக்களப்பு -  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீ அணைக்கும் படை, பிரதேச சமூக மட்ட அமைப்பினர், பிரதேச இளைஞர்கள் என பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலும், 

குறித்த தீ விபத்தில் வர்த்தக நிலையத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான அனைத்துப் பொருட்களும் தீயில் கருகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து  மட்டக்களப்பு -  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீ அணைக்கும் படை, பிரதேச சமூக மட்ட அமைப்பினர், பிரதேச இளைஞர்கள் என பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலும், குறித்த தீ விபத்தில் வர்த்தக நிலையத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான அனைத்துப் பொருட்களும் தீயில் கருகியுள்ளன.தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement