• Dec 02 2025

நெற்பயிர்களை அள்ளிச்சென்ற பெரு வெள்ளம்; பெரும்போகம் பாதிப்பு - கவலையில் விவசாயிகள்!

shanuja / Dec 1st 2025, 5:04 pm
image

டிட்வா புயலின் கோரத்தால்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 


வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வேத்துச்சேனை, வட்டவளை, நாதனைவெளி, ஓட்டடிமுன்மாரி உள்ளிட்ட பல வயற்கண்டங்களில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளப் பெருக்கினால் வயல்வெளிகள் அனைத்தும் உடைப்பெடுத்து மீதமுள்ள நெல் நாற்றுக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. 


இதனால் பெரும்போகம் பாதிக்கப்பட்டதையடுத்து  விவசாயிகள் உடைப்பெடுத்துள்ள வரம்புகளை திருத்தி சீரமைத்து வருகின்றனர்.


வெள்ள நீர் வடிந்து கொண்டிக்கின்ற நிலையில் வயல் பாதிப்புகளை விவசாய அமைப்புக்களுடாக பாதிப்பின் நிலவரங்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாடுகளை மோற்கொண்டுள்ளதாக  அப்பகுதி பெரும்போக  அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.

நெற்பயிர்களை அள்ளிச்சென்ற பெரு வெள்ளம்; பெரும்போகம் பாதிப்பு - கவலையில் விவசாயிகள் டிட்வா புயலின் கோரத்தால்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வேத்துச்சேனை, வட்டவளை, நாதனைவெளி, ஓட்டடிமுன்மாரி உள்ளிட்ட பல வயற்கண்டங்களில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளப் பெருக்கினால் வயல்வெளிகள் அனைத்தும் உடைப்பெடுத்து மீதமுள்ள நெல் நாற்றுக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இதனால் பெரும்போகம் பாதிக்கப்பட்டதையடுத்து  விவசாயிகள் உடைப்பெடுத்துள்ள வரம்புகளை திருத்தி சீரமைத்து வருகின்றனர்.வெள்ள நீர் வடிந்து கொண்டிக்கின்ற நிலையில் வயல் பாதிப்புகளை விவசாய அமைப்புக்களுடாக பாதிப்பின் நிலவரங்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாடுகளை மோற்கொண்டுள்ளதாக  அப்பகுதி பெரும்போக  அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement