• Feb 08 2025

அரகலய இழப்பீட்டில் பாரிய மோசடி - முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

Chithra / Feb 8th 2025, 4:38 pm
image

 

அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும்  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அரகலய இழப்பீட்டில் பாரிய மோசடி - முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்  அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும்  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement