• Apr 11 2025

பசறையில் பாரிய மண்சரிவு - மண் மேடுகளால் மூடப்பட்ட வீடுகள்..! 64 பேர் இடம்பெயர்வு

Chithra / Jan 14th 2024, 4:08 pm
image

                     

பசறை மற்றும் படல்கும்புர பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரடோல கிராமத்தின் நீரேந்து பகுதியில் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப் பிரதேசத்தில் மூன்று தோட்ட வீடுகள் முற்றாக மண் மேடுகளால் மூடப்பட்டுள்ளதுடன் 12 குடும்பங்கள் வசிக்கும் மற்றொரு தொடர் வீடுகளும் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த பிரதேசத்தில் சுமார் 30 ஏக்கர் வயல் நிலம் நிலச்சரிவில் தாழிறங்கியுள்ளது

அப் பகுதியில் பெய்து வரும் கனமழை 2 நாட்கள் ஆன நிலையில்,

கிராம மக்கள் கிராமத்திற்கு செல்ல தயங்குவதாகவும் தெரிவித்த படல்கும்புற பொலிஸார் பாதிக்கப்பட மக்களுக்குத் தேவையான நலன் புரி விடயங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

மண் சரிவினால் இடம் பெயர்ந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் வரதொல பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளகாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவினால் 3 வீடுகள், பல காய்கறி தோட்டங்களும், பப்பாளி, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர் தோட்டங்கள் மாத்திரமன்றி பல ஏக்கர் வயல் நிலங்களும் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டுள்ளதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


பசறையில் பாரிய மண்சரிவு - மண் மேடுகளால் மூடப்பட்ட வீடுகள். 64 பேர் இடம்பெயர்வு                      பசறை மற்றும் படல்கும்புர பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரடோல கிராமத்தின் நீரேந்து பகுதியில் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன் காரணமாக அப் பிரதேசத்தில் மூன்று தோட்ட வீடுகள் முற்றாக மண் மேடுகளால் மூடப்பட்டுள்ளதுடன் 12 குடும்பங்கள் வசிக்கும் மற்றொரு தொடர் வீடுகளும் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.அத்தோடு குறித்த பிரதேசத்தில் சுமார் 30 ஏக்கர் வயல் நிலம் நிலச்சரிவில் தாழிறங்கியுள்ளதுஅப் பகுதியில் பெய்து வரும் கனமழை 2 நாட்கள் ஆன நிலையில்,கிராம மக்கள் கிராமத்திற்கு செல்ல தயங்குவதாகவும் தெரிவித்த படல்கும்புற பொலிஸார் பாதிக்கப்பட மக்களுக்குத் தேவையான நலன் புரி விடயங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.மண் சரிவினால் இடம் பெயர்ந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் வரதொல பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளகாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிலச்சரிவினால் 3 வீடுகள், பல காய்கறி தோட்டங்களும், பப்பாளி, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர் தோட்டங்கள் மாத்திரமன்றி பல ஏக்கர் வயல் நிலங்களும் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டுள்ளதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement