• May 19 2024

நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை கண்டித்து அளுக்கடை நீதிமன்றம் முன் பாரிய போராட்டம் - அன்ரன் புனித நாயகம் தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Oct 5th 2023, 7:49 am
image

Advertisement

முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறைக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என வன்னி வலயச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கேட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி தனக்கு  விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் தனது பதவி விலகல் கடிதத்தில் தனக்கு ஏற்பட்ட ஆச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை கண்டித்து வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் கொழும்பு சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு அளுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னாள் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.

நீதிபதிக்காக நீதி கேட்டு இடம் பெறும் போராட்டங்களில் சட்டத்தரணிகள் என்ற வகையில் எமது வேலைகளை பாகிஸ்தரித்து ஆதரவை வழங்குவோம்.

ஆகவே முல்லைத்தீவு நீதிபதிக்காக நீதி கேட்டு இடம்பெறும் போராட்டங்களில் பொது அமைப்புகளும் மக்களும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மனித சங்கிலி போராட்டத்தில் வட மாகாணத்தைச்  சேர்ந்த நீதிமன்றங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.


நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை கண்டித்து அளுக்கடை நீதிமன்றம் முன் பாரிய போராட்டம் - அன்ரன் புனித நாயகம் தெரிவிப்பு samugammedia முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறைக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என வன்னி வலயச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கேட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு நீதிபதி தனக்கு  விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் தனது பதவி விலகல் கடிதத்தில் தனக்கு ஏற்பட்ட ஆச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை கண்டித்து வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் கொழும்பு சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு அளுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னாள் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.நீதிபதிக்காக நீதி கேட்டு இடம் பெறும் போராட்டங்களில் சட்டத்தரணிகள் என்ற வகையில் எமது வேலைகளை பாகிஸ்தரித்து ஆதரவை வழங்குவோம்.ஆகவே முல்லைத்தீவு நீதிபதிக்காக நீதி கேட்டு இடம்பெறும் போராட்டங்களில் பொது அமைப்புகளும் மக்களும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த மனித சங்கிலி போராட்டத்தில் வட மாகாணத்தைச்  சேர்ந்த நீதிமன்றங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement