• Apr 22 2025

எட்டு மாணவிகளை சீரழித்த கணித ஆசிரியர்! - பெற்றோரின் முறைப்பாட்டால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்

Thansita / Mar 7th 2025, 11:02 pm
image

திம்புலாகல கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில்  கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,  ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள பாடசாலையில், 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் கணித பாட ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக    பெற்றோர்கள் அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்

கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணித ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர்  (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத தொடர்பான  மேலதிக விசாரணைகளை அரலகங்வில மகளிர் பொலிஸ் பணியகம் உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு மாணவிகளை சீரழித்த கணித ஆசிரியர் - பெற்றோரின் முறைப்பாட்டால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் திம்புலாகல கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில்  கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,  ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  திம்புலாகல கல்வி வலயத்தின் அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள பாடசாலையில், 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் கணித பாட ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக    பெற்றோர்கள் அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணித ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர்  (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இத தொடர்பான  மேலதிக விசாரணைகளை அரலகங்வில மகளிர் பொலிஸ் பணியகம் உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement