• Jan 23 2025

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்கள்!

Chithra / Jan 22nd 2025, 8:09 am
image


நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என  அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் தேவையான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.

இதேவேளை சமைத்த உணவு, உலர் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான தலையீடுகள் சுகாதார மருத்துவ அலுவலகங்கள் மூலம் இந்த நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.

18 மாவட்டங்களில் 5,736 குடும்பங்களைச் சேர்ந்த 18,696 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,324 பேர் தற்போது 18 பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர். என்று கூறியுள்ளார். 

இதேவேளை களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்கள் நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என  அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் தேவையான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.இதேவேளை சமைத்த உணவு, உலர் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான தலையீடுகள் சுகாதார மருத்துவ அலுவலகங்கள் மூலம் இந்த நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.18 மாவட்டங்களில் 5,736 குடும்பங்களைச் சேர்ந்த 18,696 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,324 பேர் தற்போது 18 பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர். என்று கூறியுள்ளார். இதேவேளை களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement