• May 19 2024

வவுனியாவில் மே18 இனப்படுகொலை நாள் ஊர்திப் பவனி..! மக்கள் எழுச்சியுடன் அஞ்சலி..!samugammedia

Sharmi / May 13th 2023, 12:59 pm
image

Advertisement

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்து இன்று (13.05.2023) காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில்  ஆரம்பமாகியிருந்ததுடன் மக்கள் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் குறித்த ஊர்திப்பவனியானது நகரை வலம்வந்ததுடன் மன்னார் நோக்கி பயணமானது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.

தமிழ் இனப் படுகொலையின் நினைவாக இந்த ஆண்டு பல பகுதிகளிலும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. நேற்றைய தினம் வடக்கு , கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் மற்றொரு அங்கமாக முல்லைத்தீவில் இருந்து குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி தொடங்கப்பட்டிருந்தது.

மன்னார் , கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்லும் இந்த ஊர்தி மீண்டும் கிளிநொச்சி மாவட்டம்  ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையும் என்று இதன் ஏற்பாட்டாளாகிய தாயக நினைவேந்தல் அமைப்பினர். தெரிவித்தனர்.


வவுனியாவில் மே18 இனப்படுகொலை நாள் ஊர்திப் பவனி. மக்கள் எழுச்சியுடன் அஞ்சலி.samugammedia வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்து இன்று (13.05.2023) காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில்  ஆரம்பமாகியிருந்ததுடன் மக்கள் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர். அதன் பின்னர் குறித்த ஊர்திப்பவனியானது நகரை வலம்வந்ததுடன் மன்னார் நோக்கி பயணமானது.2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.தமிழ் இனப் படுகொலையின் நினைவாக இந்த ஆண்டு பல பகுதிகளிலும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. நேற்றைய தினம் வடக்கு , கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் மற்றொரு அங்கமாக முல்லைத்தீவில் இருந்து குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி தொடங்கப்பட்டிருந்தது.மன்னார் , கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்லும் இந்த ஊர்தி மீண்டும் கிளிநொச்சி மாவட்டம்  ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையும் என்று இதன் ஏற்பாட்டாளாகிய தாயக நினைவேந்தல் அமைப்பினர். தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement