• Dec 27 2024

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி..!

Sharmi / Dec 24th 2024, 11:13 pm
image

எமது நாட்டில் எமக்கு இருக்கக்கூடிய சவால்களுக்கு மத்தியில் பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இயேசு நாதர் எமக்கு என பிறக்கின்றார்.வறுமையிலும்,நோயிலும்,துன்பப் படுவோர் ஈடேற்றம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் துணை புரிய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

கிறிஸ்துமஸ் என்று நாம் அழைக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவை இன்று அகில உலகிலும் கொண்டாடுகின்றோம்.

கிறிஸ்து பிறப்பு விழா எவ்வளவு முக்கியமானதொரு பெரு விழா என்று கணிப்பதற்கு காரணம் மனித வரலாற்றில் இயேசுநாதர் இவ் உலகில் பிறந்தது   வரலாற்றிலேயே இருக்கக்கூடிய ஒரு பெரிய நிகழ்வாக இருந்ததினால் தான் அவ்வாறு பார்க்கும் போது இறைவன் மனிதன் மீது கொண்ட ஆழ்ந்த அன்பினாலே தன்னுடைய மகன் இவ் உலகிற்கு வந்து மக்களுக்கு ஒளியையும், அமைதியையும் அழிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.

அதன்படியே  நம் ஆண்டவர் இயேசு இவ் உலகில் பிறந்து எமக்கு எல்லாம் ஒளியாகவும்,அமைதியாகவும் இருக்கின்றார்.

2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா  அனைவருக்கும்,அமைதியையும் ஒளியையும் ஒன்றிப்பையும் தர வேண்டும் என்று ஆசிக்கிறேன்.

எமது நாட்டில் எமக்கு இருக்கக்கூடிய சவால்களுக்கு மத்தியில் பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இயேசு நாதர் எமக்கு என பிறக்கின்றார்.எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றார்.உலகம் முழுவதும் அவருடைய மகிழ்ச்சி கிடைக்கப்பெற வேண்டும்.

மக்கள் ஒளியில் வாழ வேண்டும். இருள் எல்லாம் அகற்றப்பட்டு வறுமையிலும்,நோயிலும்,துன்பப்படுவோர் ஈடேற்றம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் உங்களுக்கு அருள்வாராக.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி. எமது நாட்டில் எமக்கு இருக்கக்கூடிய சவால்களுக்கு மத்தியில் பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இயேசு நாதர் எமக்கு என பிறக்கின்றார்.வறுமையிலும்,நோயிலும்,துன்பப் படுவோர் ஈடேற்றம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் துணை புரிய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,கிறிஸ்துமஸ் என்று நாம் அழைக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவை இன்று அகில உலகிலும் கொண்டாடுகின்றோம்.கிறிஸ்து பிறப்பு விழா எவ்வளவு முக்கியமானதொரு பெரு விழா என்று கணிப்பதற்கு காரணம் மனித வரலாற்றில் இயேசுநாதர் இவ் உலகில் பிறந்தது   வரலாற்றிலேயே இருக்கக்கூடிய ஒரு பெரிய நிகழ்வாக இருந்ததினால் தான் அவ்வாறு பார்க்கும் போது இறைவன் மனிதன் மீது கொண்ட ஆழ்ந்த அன்பினாலே தன்னுடைய மகன் இவ் உலகிற்கு வந்து மக்களுக்கு ஒளியையும், அமைதியையும் அழிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.அதன்படியே  நம் ஆண்டவர் இயேசு இவ் உலகில் பிறந்து எமக்கு எல்லாம் ஒளியாகவும்,அமைதியாகவும் இருக்கின்றார்.2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா  அனைவருக்கும்,அமைதியையும் ஒளியையும் ஒன்றிப்பையும் தர வேண்டும் என்று ஆசிக்கிறேன்.எமது நாட்டில் எமக்கு இருக்கக்கூடிய சவால்களுக்கு மத்தியில் பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இயேசு நாதர் எமக்கு என பிறக்கின்றார்.எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றார்.உலகம் முழுவதும் அவருடைய மகிழ்ச்சி கிடைக்கப்பெற வேண்டும்.மக்கள் ஒளியில் வாழ வேண்டும். இருள் எல்லாம் அகற்றப்பட்டு வறுமையிலும்,நோயிலும்,துன்பப்படுவோர் ஈடேற்றம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் உங்களுக்கு அருள்வாராக.அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement