• May 17 2024

லண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தில் தியானமண்டபம் திறந்து வைப்பு! SamugamMedia

Chithra / Mar 12th 2023, 11:22 am
image

Advertisement

லண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

கட்டிட இணை ஒருங்கிணைப்பாளரும், ஆலய இணை ஸ்தாபகருமாகிய கலாநிதி அப்பையா தேவசகாயத்தினால் குறித்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

இறைவணக்கத்துடன் சிவாச்சாரியர்கள் மந்திரம் ஒலிக்க வாசுசாந்தி, கணபதி, லக்ஸ்மி, நவக்கிரக, ஹோம வழிப்பாட்டுடன் தியானமண்டப திறப்பு விழா நடைபெற்றது.

ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் இணை ஸ்தாபகரும், அறங்காவலரும், கட்டிட இணை ஒருங்கிணைப்பாளர் கலாநிதி அப்பையா தேவசகாயம் கட்டிட ஓப்பந்தகாரரிடமிருந்து திறப்பு கோர்வையை பெற்று, அவற்றை ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் நிர்வாக சபை தலைவர் யோகநாதனிடமும், பொருளாளர் சபாபதி றகுநாதனிடமும் கையளித்தார்.

வயது மூத்தோர்கள் ஆலய வழிபாட்டுடன் இளைப்பாறி செல்லவும், இளம் சந்ததியினருக்கு சைவசமய, தமிழ் வகுப்புகள் , மற்றும் பலரும் பயன் பெறும் வகையில் தியான, யோகாசன பயிற்சி வகுப்புகள், ஆன்மீக உரைகள், ஆன்மீக புத்தகங்கள் கொண்ட நூல்நிலையம் இவை அனைத்தையும் உள்ளடக்கிய சேவையினை வழங்கும் நல் நோக்கில் குறித்த மண்டபம் திறந்துவைக்கப்படுள்ளது.



லண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தில் தியானமண்டபம் திறந்து வைப்பு SamugamMedia லண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.கட்டிட இணை ஒருங்கிணைப்பாளரும், ஆலய இணை ஸ்தாபகருமாகிய கலாநிதி அப்பையா தேவசகாயத்தினால் குறித்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.இறைவணக்கத்துடன் சிவாச்சாரியர்கள் மந்திரம் ஒலிக்க வாசுசாந்தி, கணபதி, லக்ஸ்மி, நவக்கிரக, ஹோம வழிப்பாட்டுடன் தியானமண்டப திறப்பு விழா நடைபெற்றது.ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் இணை ஸ்தாபகரும், அறங்காவலரும், கட்டிட இணை ஒருங்கிணைப்பாளர் கலாநிதி அப்பையா தேவசகாயம் கட்டிட ஓப்பந்தகாரரிடமிருந்து திறப்பு கோர்வையை பெற்று, அவற்றை ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் நிர்வாக சபை தலைவர் யோகநாதனிடமும், பொருளாளர் சபாபதி றகுநாதனிடமும் கையளித்தார்.வயது மூத்தோர்கள் ஆலய வழிபாட்டுடன் இளைப்பாறி செல்லவும், இளம் சந்ததியினருக்கு சைவசமய, தமிழ் வகுப்புகள் , மற்றும் பலரும் பயன் பெறும் வகையில் தியான, யோகாசன பயிற்சி வகுப்புகள், ஆன்மீக உரைகள், ஆன்மீக புத்தகங்கள் கொண்ட நூல்நிலையம் இவை அனைத்தையும் உள்ளடக்கிய சேவையினை வழங்கும் நல் நோக்கில் குறித்த மண்டபம் திறந்துவைக்கப்படுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement