• Nov 26 2024

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் திருமலையில் சந்திப்பு..!

Sharmi / Oct 12th 2024, 4:02 pm
image

வேலையற்ற பட்டதாரிகளுக்கும், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் சப்றானுக்கும் இடையிலான சந்திப்பு மூதூர் கலாசார மண்டபத்தில் இன்று (12) காலை இடம்பெற்றது.

இதனை வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ் சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்,தோப்பூர்,வெருகல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர்,தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த முக்கியஷ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதன் போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.சப்றான்,

தேசிய மக்கள் சக்திக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டுமென வருகை தந்த பட்டதாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

அத்தோடு, தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களை பெறும்.பெற்றதன் பின்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்குள் முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ,எமது பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறும் கோரிக்கை விடுத்தார்.




வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் திருமலையில் சந்திப்பு. வேலையற்ற பட்டதாரிகளுக்கும், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் சப்றானுக்கும் இடையிலான சந்திப்பு மூதூர் கலாசார மண்டபத்தில் இன்று (12) காலை இடம்பெற்றது.இதனை வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இவ் சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்,தோப்பூர்,வெருகல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர்,தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த முக்கியஷ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதன் போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.சப்றான்,தேசிய மக்கள் சக்திக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டுமென வருகை தந்த பட்டதாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.அத்தோடு, தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களை பெறும்.பெற்றதன் பின்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்குள் முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ,எமது பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறும் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement