• Sep 20 2024

இலங்கை வணிகப் பேரவைக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு..!samugammedia

Tharun / Jan 31st 2024, 6:09 pm
image

Advertisement

 இலங்கை வணிகப் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான   கலந்துரையாடல் ஒன்று இன்று (31) முற்பகல் ம.வி.மு.தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.  


இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வணிகத்துறை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைரீதியான அணுகுமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.  


இலங்கை வணிகப் பேரவையின் சார்பாக இந்த சந்திப்பில்  அதன் தவிசாளர் ஏர்னஸ்ற் அன்ட் யங் நிறுவனத்தின் உள்நாட்டு முகாமைத்துவ பங்காளி துமிந்த ஹுலங்கமுவ, ஸ்டேன்டர்ட் அன்ட் சார்ட்டட் வங்கியின் பிங்குமால் தெவரதன்திரீ, டயலொக் ஆசியாட்டாவின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்  சுபுன் வீரசிங்க, அட்வகாட்டா நிறுவனத்தின் தலைவர் முட்டாசா ஜெபர்ஜி ஆகியோரை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதோடு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டி. லால்காந்த, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகிய தோழர்களை உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.


இலங்கை வணிகப் பேரவைக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு.samugammedia  இலங்கை வணிகப் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான   கலந்துரையாடல் ஒன்று இன்று (31) முற்பகல் ம.வி.மு.தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.  இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வணிகத்துறை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைரீதியான அணுகுமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.  இலங்கை வணிகப் பேரவையின் சார்பாக இந்த சந்திப்பில்  அதன் தவிசாளர் ஏர்னஸ்ற் அன்ட் யங் நிறுவனத்தின் உள்நாட்டு முகாமைத்துவ பங்காளி துமிந்த ஹுலங்கமுவ, ஸ்டேன்டர்ட் அன்ட் சார்ட்டட் வங்கியின் பிங்குமால் தெவரதன்திரீ, டயலொக் ஆசியாட்டாவின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்  சுபுன் வீரசிங்க, அட்வகாட்டா நிறுவனத்தின் தலைவர் முட்டாசா ஜெபர்ஜி ஆகியோரை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதோடு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டி. லால்காந்த, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகிய தோழர்களை உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement