• May 19 2024

இணையத்தளத்தின் ஊடாக சந்திப்பு - பொது நிர்வாக அமைச்சின் முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Oct 23rd 2023, 11:10 am
image

Advertisement

 

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாட்களுக்குள் நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையவழி சந்திப்பால் அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக பிரச்சினைகளை விவாதிக்க நேரம் போதாததால் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் முறைப்பாட்டில் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் மாவட்ட செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சந்திப்புகள் இடம்பெறும் என அரச நிர்வாக செயலாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றறிக்கையின் பிரகாரம் கடந்த 19ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.


இணையத்தளத்தின் ஊடாக சந்திப்பு - பொது நிர்வாக அமைச்சின் முக்கிய அறிவிப்பு samugammedia  மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாட்களுக்குள் நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இணையவழி சந்திப்பால் அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.குறிப்பாக பிரச்சினைகளை விவாதிக்க நேரம் போதாததால் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் முறைப்பாட்டில் தெரிவிக்கின்றனர்.இதன்படி, எதிர்வரும் காலங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் மாவட்ட செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சந்திப்புகள் இடம்பெறும் என அரச நிர்வாக செயலாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சுற்றறிக்கையின் பிரகாரம் கடந்த 19ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement