• Nov 28 2024

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்...! நற்குணம் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 3:51 pm
image

பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்றையதினம்(29)  யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றையதினம்  யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி  இணைப்பு குழு கலந்துரையாடலில் எமது மீனவர் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில்  கருத்துத் தெரிவித்திருந்தேன்.

அச் சமயம், கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் எமது மீனவ சங்கப் பிரதிநிதிகளை காடையார்கள் என பேசியமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகளை இவ்வாறு பேசுவது சபை நாகரிகம் அல்ல.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஊடகங்கள் ஊடாக பார்க்கிறோம்.

மிளகாய் தூளுடன், வருகிறார்கள் தண்ணீர் போத்தலுடன் வருகிறார்கள் சமூகத்துக்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகங்களால் சக பாராளுமன்ற உறுப்பினர்களை பேசுகின்றார்கள் இவை அனைத்தையும் ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பாராளுமன்றம் போல்  மாவட்ட மட்டங்களிடம் வரும் கலந்துரையாடல்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சமூகத்தை பார்த்து இழிவான வார்த்தை பிரயோகத்தை பிரயோகிப்பதை இனி வரும் காலங்களிலாவது  நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். நற்குணம் வேண்டுகோள்.samugammedia பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார்.இன்றையதினம்(29)  யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றையதினம்  யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி  இணைப்பு குழு கலந்துரையாடலில் எமது மீனவர் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில்  கருத்துத் தெரிவித்திருந்தேன்.அச் சமயம், கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் எமது மீனவ சங்கப் பிரதிநிதிகளை காடையார்கள் என பேசியமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகளை இவ்வாறு பேசுவது சபை நாகரிகம் அல்ல.பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஊடகங்கள் ஊடாக பார்க்கிறோம்.மிளகாய் தூளுடன், வருகிறார்கள் தண்ணீர் போத்தலுடன் வருகிறார்கள் சமூகத்துக்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகங்களால் சக பாராளுமன்ற உறுப்பினர்களை பேசுகின்றார்கள் இவை அனைத்தையும் ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.பாராளுமன்றம் போல்  மாவட்ட மட்டங்களிடம் வரும் கலந்துரையாடல்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சமூகத்தை பார்த்து இழிவான வார்த்தை பிரயோகத்தை பிரயோகிப்பதை இனி வரும் காலங்களிலாவது  நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement