சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான வசந்த சந்திரபாலவினால் எழுதி வெளியிட்ட 'கடுலின் நோசெதுனு மாதம' என்ற புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டது.
கடந்த கால யுத்த நிலைமைகளை எதிர்கொண்ட குறித்த பத்திரிகையாளர் அவரது அனுபவங்களை குறித்த புத்தகத்தில் எழுதியுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் அவர் செய்த சேவைக்காகவும் குறித்த புத்தக வெளியீட்டையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாராட்டினார்.
இவர் அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாக கொண்டுள்ளதுடன் 30 வருட அனுபவமுள்ள உள்நாட்டு போரில் பல்வேறு சாட்சிகளை கொண்ட ஊடகவியலாளர் ஆவார்.
அத்துடன் போர் கால செய்திகளின் ஊடாக தான் பெற்ற அனுபவங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கில் தமிழில் கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் என்ற பொருள் படும் என்ற தலைப்பில் இப்புத்தகம் தற்போது சந்தையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கி வைப்பு சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான வசந்த சந்திரபாலவினால் எழுதி வெளியிட்ட 'கடுலின் நோசெதுனு மாதம' என்ற புத்தகம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டது.கடந்த கால யுத்த நிலைமைகளை எதிர்கொண்ட குறித்த பத்திரிகையாளர் அவரது அனுபவங்களை குறித்த புத்தகத்தில் எழுதியுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் அவர் செய்த சேவைக்காகவும் குறித்த புத்தக வெளியீட்டையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாராட்டினார்.இவர் அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாக கொண்டுள்ளதுடன் 30 வருட அனுபவமுள்ள உள்நாட்டு போரில் பல்வேறு சாட்சிகளை கொண்ட ஊடகவியலாளர் ஆவார்.அத்துடன் போர் கால செய்திகளின் ஊடாக தான் பெற்ற அனுபவங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கில் தமிழில் கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள் என்ற பொருள் படும் என்ற தலைப்பில் இப்புத்தகம் தற்போது சந்தையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.