• Nov 26 2024

மெரினாவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - காவல் துறையினர் விசேட பாதுகாப்பு...!samugammedia

Anaath / Dec 31st 2023, 12:48 pm
image

இந்த ஆண்டும் புத்தாண்டினை வரவேற்க சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர பொலிசார்  பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் வகையில்  இன்று இரவு 8 மணியில் இருந்து புத்தாண்டு தினமான நாளை காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்  சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் புத்தாண்டு தினத்தில் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள். அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மெரினாவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - காவல் துறையினர் விசேட பாதுகாப்பு.samugammedia இந்த ஆண்டும் புத்தாண்டினை வரவேற்க சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர பொலிசார்  பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் வகையில்  இன்று இரவு 8 மணியில் இருந்து புத்தாண்டு தினமான நாளை காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்  சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் புத்தாண்டு தினத்தில் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள். அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement