• May 07 2024

பொதுஜன பெரமுனவில் பிளவுபட்ட புதிய அரசியல் கூட்டணி நாளை உதயம்..! எம்.பி. வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 31st 2023, 1:05 pm
image

Advertisement


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை  அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கூட்டணியின் செயல்பாட்டு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷ யாப்பா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவரை உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதே எமது கூட்டணியின் பிரதான நோக்கம் என்றும் கூறினார்.

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் படுமோசமாக சீரழிவுகளை எதிர்க்கொண்ட சந்தர்ப்பத்திலேயே எமது புதிய அரசியல் கூட்டணி உருவாக்கும் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே பொதுவாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களாகவும் பங்காளி கட்சிகளின் அங்கத்தவர்களாகவுமே உள்ளனர். 

சிறந்த ஒரு நாட்டை உருவாக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவை ஆதரித்திருந்தோம்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுஜன பெரமுனவின் செயல்பாடுகள் நாட்டின் நலன் கருதி இல்லாது, வீண் நெருக்கடிகளை தோற்றுவிக்கும் வகையிலேயே காணப்பட்டது.

எனவே தான் பொதுஜன பெரமுனவிடமிருந்து விலகி சுயாதீனமாக செயல்பட பலரும் தீர்மானித்தனர். அவ்வாறு சுயாதீனமான பலரும் எம்முடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளர்.

இதில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

கூட்டணியின் அங்குராப்பண நிகழ்வின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் செயல்பாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பொதுஜன பெரமுனவில் பிளவுபட்ட புதிய அரசியல் கூட்டணி நாளை உதயம். எம்.பி. வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை  அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகின்றது.குறித்த கூட்டணியின் செயல்பாட்டு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷ யாப்பா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவரை உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதே எமது கூட்டணியின் பிரதான நோக்கம் என்றும் கூறினார்.நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் படுமோசமாக சீரழிவுகளை எதிர்க்கொண்ட சந்தர்ப்பத்திலேயே எமது புதிய அரசியல் கூட்டணி உருவாக்கும் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.இந்த கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே பொதுவாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களாகவும் பங்காளி கட்சிகளின் அங்கத்தவர்களாகவுமே உள்ளனர். சிறந்த ஒரு நாட்டை உருவாக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவை ஆதரித்திருந்தோம்.ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுஜன பெரமுனவின் செயல்பாடுகள் நாட்டின் நலன் கருதி இல்லாது, வீண் நெருக்கடிகளை தோற்றுவிக்கும் வகையிலேயே காணப்பட்டது.எனவே தான் பொதுஜன பெரமுனவிடமிருந்து விலகி சுயாதீனமாக செயல்பட பலரும் தீர்மானித்தனர். அவ்வாறு சுயாதீனமான பலரும் எம்முடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளர்.இதில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.கூட்டணியின் அங்குராப்பண நிகழ்வின் போது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அரசியல் செயல்பாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement