• Mar 26 2025

மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்..!

Sharmi / Mar 24th 2025, 4:12 pm
image

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் மேர்வின் சில்வா சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சரைத் தவிர, மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் மேர்வின் சில்வா சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.முன்னாள் அமைச்சரைத் தவிர, மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement