மிக்ஜாம் புயல் நாளையதினம் முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன்
தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.
அத்துடன் கடும் புயல், மழை காரணமாக வெள்ள அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் மூழ்கியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும்,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் குறித்த கட்டடத்தில் பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் சென்று இருவரை மீட்டுள்ளதுடன் மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் மிக்ஜாம் புயல். வெள்ள நீரில் மூழ்கிய விமான நிலையம்.samugammedia மிக்ஜாம் புயல் நாளையதினம் முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. அத்துடன் கடும் புயல், மழை காரணமாக வெள்ள அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் மூழ்கியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும்,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் குறித்த கட்டடத்தில் பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் சென்று இருவரை மீட்டுள்ளதுடன் மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.