மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் இன்று(16) நடைபெற்றது.
கல்லூரியின் ஸ்தாபக தலைவர் மௌவி அல்ஹாஜ் எல்.ரி.எம். இஸ்ஹாக் பஹ்ஜி மற்றும் அதிபர் மௌவி எ.பி.எம்.மர்ஹான் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வானது நபி நாயகம் அவர்களின் சிறப்பு பற்றிய மௌலித் ஷரிவ் நிகழ்வுடன் ஆரம்பமாகி நபி நாயகம் அவர்களின் புகழ் பாடலுடன் கொடி ஊர்வலமும் வாகனப் பேரணியாக இடம்பெற்றது.
மீராவோடை மன்ப உல் ஹீதா அறப்புக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகிய இவ் ஊர்வலமானது, வாழைச்சேனை வீதியூடாக சென்று ஓட்டமாவடி ஊடாக மீண்டும் அறபுக் கல்லூரியை வந்தடைந்தது.
பின்னர் நபி பற்றிய வாழ்க்கை வரலாறு தொடர்பான சிறப்புரை நிகழ்வு நடைபெற்றது.
சிறப்புரையை பன்நூல் ஆசிரியர் அல்ஹாஜ் மௌலவி ரபியுத்தீன் ஜமாலி உரையாற்றினார்.நிகழ்வில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த முக்கிய பிரமுவர்களும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற மீலாதுன் நபி விழா. மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் இன்று(16) நடைபெற்றது.கல்லூரியின் ஸ்தாபக தலைவர் மௌவி அல்ஹாஜ் எல்.ரி.எம். இஸ்ஹாக் பஹ்ஜி மற்றும் அதிபர் மௌவி எ.பி.எம்.மர்ஹான் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.இன்றைய நிகழ்வானது நபி நாயகம் அவர்களின் சிறப்பு பற்றிய மௌலித் ஷரிவ் நிகழ்வுடன் ஆரம்பமாகி நபி நாயகம் அவர்களின் புகழ் பாடலுடன் கொடி ஊர்வலமும் வாகனப் பேரணியாக இடம்பெற்றது.மீராவோடை மன்ப உல் ஹீதா அறப்புக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகிய இவ் ஊர்வலமானது, வாழைச்சேனை வீதியூடாக சென்று ஓட்டமாவடி ஊடாக மீண்டும் அறபுக் கல்லூரியை வந்தடைந்தது.பின்னர் நபி பற்றிய வாழ்க்கை வரலாறு தொடர்பான சிறப்புரை நிகழ்வு நடைபெற்றது.சிறப்புரையை பன்நூல் ஆசிரியர் அல்ஹாஜ் மௌலவி ரபியுத்தீன் ஜமாலி உரையாற்றினார்.நிகழ்வில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த முக்கிய பிரமுவர்களும் கலந்து கொண்டனர்.