• Sep 21 2024

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள்! samugammedia

Tamil nila / May 19th 2023, 8:16 am
image

Advertisement

டுபாயில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  8000 கிலோவுக்கும் அதிகமான நிகோடின் அடங்கிய போதைப்பொருளை இலங்கை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 16 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும், 50 கிராம் கொண்ட 160,200 பொதிகள் என போதைப்பொருள் கையிருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதான வர்த்தக நிறுவனமொன்றின் போலிப் பெயரைப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூத்த சுங்க இயக்குநர் யு. கே. அசோக ரஞ்சித் மற்றும் சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் திருமதி சாந்தனி செனவிரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள் samugammedia டுபாயில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  8000 கிலோவுக்கும் அதிகமான நிகோடின் அடங்கிய போதைப்பொருளை இலங்கை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.இந்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 16 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும், 50 கிராம் கொண்ட 160,200 பொதிகள் என போதைப்பொருள் கையிருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையின் பிரதான வர்த்தக நிறுவனமொன்றின் போலிப் பெயரைப் பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மூத்த சுங்க இயக்குநர் யு. கே. அசோக ரஞ்சித் மற்றும் சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் திருமதி சாந்தனி செனவிரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement