• Jan 10 2025

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் காட்டம்

Chithra / Jan 6th 2025, 7:43 am
image

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பிரதேச மக்களிடம் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவது தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்

இதேவேளை, தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் காட்டம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று பார்வையிட்டுள்ளார்.இதன்போது, பிரதேச மக்களிடம் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவது தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்இதேவேளை, தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement