• May 19 2024

கடலட்டைப் பண்ணை விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் நல்ல முடிவை தரவேண்டும்- கடற்றொழிலாளி கோரிக்கை!

Sharmi / Dec 30th 2022, 6:22 pm
image

Advertisement

எங்கள் கடலில் நாங்கள் பண்ணை செய்கின்றோம்- அட்டை பண்ணை எங்களுக்கு வேண்டும் என்று கடற்தொழில் சமூகங்கள் இணைந்து இன்று யாழில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் .

இது குறித்து கடற்றொழிலாளர் ஒருவர் சமூகம்  ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் சொத்தை வைத்து தான் நாங்கள் ஆளுகின்றோம் .ஏன் எங்களுக்கு அநியாயம் செய்கிறீர்கள்.எங்கள் நிலங்களில் தான் இந்த அட்டை பண்ணைகளை செய்கின்றோம்.அவர்களுக்கு இடைஞ்சல் என்று சொன்னால் அனைத்து நிலங்களையும் மறிக்க முடியாது.

எங்கேயோ இருந்த அந்நியர்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போகிறார்கள் .இதற்கு சம்மதிக்கிறது தானே இந்த அரசாங்கம். நாங்கள் உழைத்து நாங்களே சாப்பிட இயலாதா? நாங்கள் ஏன் பயப்பிட வேண்டும். 

தமிழர்களே தமிழர்கள் என்ற பொறாமையில்.  அனைத்தையும் நிறுத்துகிறார்கள்,அதிகாரிகளும் இதற்கு உந்தையாக இருக்க கூடாது. இதில் எங்கள் குறைகளை மாத்திரமே சொல்ல இயலுமே தவிர  ஒன்றுமே செய்ய இயலாது .ஆகவே இதற்கு அமைச்சர் டக்ளஸ் நல்ல முடிவினை தர வேண்டும்.என்றார்.

கடலட்டைப் பண்ணை விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் நல்ல முடிவை தரவேண்டும்- கடற்றொழிலாளி கோரிக்கை எங்கள் கடலில் நாங்கள் பண்ணை செய்கின்றோம்- அட்டை பண்ணை எங்களுக்கு வேண்டும் என்று கடற்தொழில் சமூகங்கள் இணைந்து இன்று யாழில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் .இது குறித்து கடற்றொழிலாளர் ஒருவர் சமூகம்  ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,எங்கள் சொத்தை வைத்து தான் நாங்கள் ஆளுகின்றோம் .ஏன் எங்களுக்கு அநியாயம் செய்கிறீர்கள்.எங்கள் நிலங்களில் தான் இந்த அட்டை பண்ணைகளை செய்கின்றோம்.அவர்களுக்கு இடைஞ்சல் என்று சொன்னால் அனைத்து நிலங்களையும் மறிக்க முடியாது.எங்கேயோ இருந்த அந்நியர்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போகிறார்கள் .இதற்கு சம்மதிக்கிறது தானே இந்த அரசாங்கம். நாங்கள் உழைத்து நாங்களே சாப்பிட இயலாதா நாங்கள் ஏன் பயப்பிட வேண்டும். தமிழர்களே தமிழர்கள் என்ற பொறாமையில்.  அனைத்தையும் நிறுத்துகிறார்கள்,அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருக்க கூடாது. இதில் எங்கள் குறைகளை மாத்திரமே சொல்ல இயலுமே தவிர  ஒன்றுமே செய்ய இயலாது .ஆகவே இதற்கு அமைச்சர் டக்ளஸ் நல்ல முடிவினை தர வேண்டும்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement