• May 02 2024

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி..!

Chithra / Jan 2nd 2024, 10:56 pm
image

Advertisement

மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.


இதேவேளை விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி நகர வட்டாரத்தின் ஏற்பாட்டில் தனியார் விருந்தகம் ஒன்றில் இந் நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில்  விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் நினைவுரைகளும் இடம்பெற்றன. 

குறித்த அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகரும்,தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி  உயிரிழந்திருந்தார்.

இவரது மறைவிற்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி. மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதேவேளை விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி நகர வட்டாரத்தின் ஏற்பாட்டில் தனியார் விருந்தகம் ஒன்றில் இந் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில்  விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் நினைவுரைகளும் இடம்பெற்றன. குறித்த அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகரும்,தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி  உயிரிழந்திருந்தார்.இவரது மறைவிற்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement