• Sep 19 2024

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி – ஜனாதிபதியிடம் விளக்கவுள்ள அமைச்சர்!

Tamil nila / Feb 12th 2023, 3:14 pm
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.


அதிக பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இதன் உண்மைத்தன்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


ஒவ்வொரு முறை உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையின் போதும், உருளைக்கிழங்கு இறக்குமதியின் காரணமாக விவசாயிகள் உள்ளூர் உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி – ஜனாதிபதியிடம் விளக்கவுள்ள அமைச்சர் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.அதிக பணத்தை முதலீடு செய்து இந்த நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இதன் உண்மைத்தன்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.ஒவ்வொரு முறை உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையின் போதும், உருளைக்கிழங்கு இறக்குமதியின் காரணமாக விவசாயிகள் உள்ளூர் உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement