• Jan 09 2025

வாய்ச்சொல் வீரரான அமைச்சர் வசந்த தலைமறைவு - அரிசி மாபியாக்களை எவ்வாறு அரசு இல்லாதொழிக்கும்? - எழுந்த குற்றச்சாட்டு

Chithra / Dec 30th 2024, 3:39 pm
image

 

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 10 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை கூட இறக்குமதி செய்ய முடியாத அரசாங்கம் அரிசி மாபியாக்களை எவ்வாறு இல்லாதொழிக்கும். வாய்ச்சொல் வீரரான அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமறைவாகியுள்ளார் என  தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. 

ஆனால் இதுவரையில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கூட இறக்குமதி செய்யப்படவில்லை.

தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. என தெரிவித்தார்.


வாய்ச்சொல் வீரரான அமைச்சர் வசந்த தலைமறைவு - அரிசி மாபியாக்களை எவ்வாறு அரசு இல்லாதொழிக்கும் - எழுந்த குற்றச்சாட்டு  அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 10 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை கூட இறக்குமதி செய்ய முடியாத அரசாங்கம் அரிசி மாபியாக்களை எவ்வாறு இல்லாதொழிக்கும். வாய்ச்சொல் வீரரான அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமறைவாகியுள்ளார் என  தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கூட இறக்குமதி செய்யப்படவில்லை.தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement