• May 06 2024

பாடசாலை சீருடை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Chithra / Mar 12th 2024, 2:35 pm
image

Advertisement

 

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களில் உள்ள மாணவ துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 2024 ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசின் மானியமாக 80 வீதமான சீருடைகள் இலங்கைக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் பாடசாலை சீருடைக்கான எஞ்சிய 20 சதவீதம் மானியம் வழங்கும் சீன  விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்கள் படிக்கும் தரங்களுக்கு ஏற்ப 35 வகையான துணி பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சீருடை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு  நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களில் உள்ள மாணவ துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசின் மானியமாக 80 வீதமான சீருடைகள் இலங்கைக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் பாடசாலை சீருடைக்கான எஞ்சிய 20 சதவீதம் மானியம் வழங்கும் சீன  விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் மாணவர்கள் படிக்கும் தரங்களுக்கு ஏற்ப 35 வகையான துணி பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement