• May 09 2025

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு..!

Chithra / Feb 12th 2024, 2:53 pm
image

 

2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம்.

http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு.  2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம் அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம்.http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now