• Aug 09 2025

தருமபுரம் பகுதியில் சிறுமி துஸ்பிரியோகம்; கைதான நபர் தடுப்புக்காவலில்!

shanuja / Aug 8th 2025, 8:45 pm
image

தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    


தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக கிராம சேவையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக தருமபுர பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த பகுதியில்  வசிக்கும் 46 வயதுடைய ஒருவர் 12 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிறுமி  வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக குறித்த சந்தேகநபர் தர்மபுரம்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


 கைது செய்யப்பட்ட நபர்  கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்  எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரம் பகுதியில் சிறுமி துஸ்பிரியோகம்; கைதான நபர் தடுப்புக்காவலில் தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக கிராம சேவையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக தருமபுர பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில்  வசிக்கும் 46 வயதுடைய ஒருவர் 12 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிறுமி  வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக குறித்த சந்தேகநபர் தர்மபுரம்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட நபர்  கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்  எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement