• Nov 25 2024

இஸ்ரேல் மீது இடம்பெற்றுள்ள ஏவுகணை தாக்குதல்!

Tamil nila / May 12th 2024, 7:37 pm
image

இஸ்ரேல் கடற்கரை நகரமான அஸ்கெலோனில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காஸா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 3 பேர் காயமுற்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து மேலும் தெரிய விருவதாவது, ஹமாஸ் சமீபத்தில் இஸ்ரேல் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் கரீம் சலோம் எல்லைப் பகுதியும் சனிக்கிழமை தாக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவுக்குள் நிவாரண உதவிகள் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட இந்த எல்லைப் பகுதி மீது நான்கு கணைகள் ஏவப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தகர்த்ததாகவும் வாழ்விடமில்லாத இடங்களான இவற்றில் ஏவுகணை விழுந்ததால் பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காஸாவின் தெற்குப் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் இந்தத் தாக்குதல்களை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது இடம்பெற்றுள்ள ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் கடற்கரை நகரமான அஸ்கெலோனில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காஸா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 3 பேர் காயமுற்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய விருவதாவது, ஹமாஸ் சமீபத்தில் இஸ்ரேல் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.இஸ்ரேலின் கரீம் சலோம் எல்லைப் பகுதியும் சனிக்கிழமை தாக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவுக்குள் நிவாரண உதவிகள் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட இந்த எல்லைப் பகுதி மீது நான்கு கணைகள் ஏவப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து தகர்த்ததாகவும் வாழ்விடமில்லாத இடங்களான இவற்றில் ஏவுகணை விழுந்ததால் பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் காஸாவின் தெற்குப் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் இந்தத் தாக்குதல்களை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement