• Nov 17 2024

தலவாக்கலையில் மாயமான மாணவ மாணவிகள் கண்டுபிடிப்பு!

Tamil nila / Aug 4th 2024, 7:32 pm
image

கடந்த 22 நாட்களாக காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் பாடசாலை மாணவர் ஒருவரும் நேற்று  காலி, மெட்டியாகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

 கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த தலவாக்கலை, கிரெட்வெஸ்டன் பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவரும், 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் பொலிஸாரினால் பெரும் முயற்சியுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த மாணவனும், காணாமல் போன மாணவியர்களில் ஒருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனவும், மற்றைய இரு மாணவியர்களும் அவர்களது வீடுகளுக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இந்த நான்கு மாணவ மாணவிகளும் காலி, மெட்டியாகொட பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் பின்னர் நான்கு மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.

 இவர்கள் வேலை தேடி மெட்டியாகொட பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அந்த பகுதியில் உள்ள மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்து  பணியிடங்களுக்கு வேலை தேடி சென்றதாகவும் பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெரேரா தெரிவித்தார்.

 கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்றைய தினம் (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.

தலவாக்கலையில் மாயமான மாணவ மாணவிகள் கண்டுபிடிப்பு கடந்த 22 நாட்களாக காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் பாடசாலை மாணவர் ஒருவரும் நேற்று  காலி, மெட்டியாகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த தலவாக்கலை, கிரெட்வெஸ்டன் பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவரும், 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் பொலிஸாரினால் பெரும் முயற்சியுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவனும், காணாமல் போன மாணவியர்களில் ஒருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனவும், மற்றைய இரு மாணவியர்களும் அவர்களது வீடுகளுக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நான்கு மாணவ மாணவிகளும் காலி, மெட்டியாகொட பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் பின்னர் நான்கு மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் வேலை தேடி மெட்டியாகொட பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அந்த பகுதியில் உள்ள மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்து  பணியிடங்களுக்கு வேலை தேடி சென்றதாகவும் பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெரேரா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்றைய தினம் (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement