• Mar 26 2025

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த நடமாடும் கடைகள் சுற்றிவளைப்பு!

Chithra / Mar 25th 2025, 1:17 pm
image

 

காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (24) அங்கு சோதனை நடத்தியது. 

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்த கடைகள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உணவுப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத கடைகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த சோதனையில் பங்கேற்ற நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர்.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த நடமாடும் கடைகள் சுற்றிவளைப்பு  காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (24) அங்கு சோதனை நடத்தியது. அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்த கடைகள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத கடைகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையில் பங்கேற்ற நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement